பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

க. அயோத்திதாஸப் பண்டிதர்



சுத்தி செய்யுங்கோளென்னும் மும்மொழிகளுள் பாபஞ் செய்யா திருங்களென்னுமோர் மொழியைக் கடைபிடித்தொழுகு வானாயினும் பாபத்தை ஜயிப்பான். நன்மைக் கடைபிடியுங்கோ ளென்னுமோர் மொழியைக் கடைபிடித்தொழுகுவானாயினும் பாபத்தை ஜயிப்பான். இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்னுமோர் மொழியைக் கடைபிடித்தொழுகுவானாயினும் பாபத்தை ஜயிப்பான். தாயுமானவர் செய்.58 சந்ததமும் வேதமொழி யாது வொன்றை பற்றின் அதுதான் வந்து முற்றும் எனலால் ஜகமீதிருந்தாலு மரண முண்டென்பது சதாநிஷ்டர் நினைவதில்லை. இடைக்காட்டு சித்தர் நெஞ்சொடு கிளத்தல் சாகாதிருப்பதற்குத் தான்கற்குங் கல்வியன்றோ வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன்மனமே. அகப்பேய் சித்தர் பாவந்தீரவென்றால் அகப்பேய் பற்றற நில்லுமடி சாவதுமில்லையடி யகப்பேய் சற்குருபோத நிலை. ஒளவை ஞானக்குறள் அங்கியிற்பஞ்சு செய். 218 துரியங்கடந்த சுடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு. கு கடுவெளி சித்தர். மெய்ஞ்ஞான பாதையிலேறு, சுத்த வேதாந்த வெட்டவெளி தனைத்தேறு அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு , உன்னை அண்டினோர்க் கானந்தமா மறங்கூறு. பேதவாக்கிய மார்க்கத்தில் நடந்து பேத அந்தமாம் வேதாந்தத்தினிலைத்தவன், தன்னையறியும் உண்மையுற்று திரிகாலங்களையு முணர்ந்து பிரம்மணமாம் நற்செயல்வீசி சருவ சீவர்களுக்கும் உபகாரியாய் விளங்கி அரஹத்தென்றும்,