பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

45



தெளிதல். மேற்குறித்த வேதம், உபநிடதம், பிடசம், உபநயனம், தேவநிலை, தேவர்கள் முதலிய பகுதிகளை நன்கறிதல் மானிடராய் ஒவ்வொருவருடைய கடன் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஒன்றைப் பரியாலோசியாமல் அங்கீகரித்தல் மூட மதியாகும். மனிதரென்பா ரொவ்வொருவருக்கும், அறிவு உண்டு. அவ்வறி வைச் சிறுக சிறுக விசாலப்படுத்திப்பார்த்தால் தான், நமது, மானிடரென்ற பெயருக்கு ஒருவித மதிப்புண்டாகும். இல்லா விட்டால் சொன்னதைச் சொல்லும் கிள்ளைப்போலும், காட்டிய கைபக்கம் குலைக்கும் நாயைப்போ லுந்தான் நம் நாட்டில் நாம் விளங்குவோம் என்பது திண்ணம். சில்லாண்டுகட்கு முன்னர், நமது இந்தியாவில் பல வேதக்காரர்கள் தோன்றினார்கள். அவர்களுள் பல வாதங்க ளேற்பட்டிருந்தது. அவர்கள் மதத்தின் நிமித்தம் பல அரசர்களைப் படைத்தார்கள். ஒருவ ருண்டாக்கிய மதத்தை மற்றொரு அரசாங் கத்தார் அழித்தார்கள். ஒருவர் கடவுளை, மதத்தை, குருக்களை, கோவில்களை, அரசாங்கத்தை, பிரஜைகளை இன்னொரு கூட்டத்தார்கள் தொலைத்தார்கள். இப்படி யே எப்போதும் மதச்சண்டையும், கடவுள் சண்டையும், கோவில், குருக்கள் சண்டையும், அரசர், குடிகள் சண்டையும், நீடித்திருந்தது. இவைகளுக்கு காரணம், தற்காலம் “நாங்களே! யதார்த்த பிராமணர்” என்று பொய்சொல்லி இந்திய பைத்தியக்காரர்களை லசப்படுத்தி ஆண்டு அடிமையாக்கி வைத்துக்கொண்டுள்ள பாரசீக ஆரியர்களென்னும் பார்ப்பாரப் படு பாவிகளேயாகும். இப்பாரசீகர்களாகிய ஆரியர்கள், பிராமணர்களாக இருக்கின்றார்கள் என்று சத்தியஞ்செய்ய, அக்கினி மதத்தாருக்கு ஆத்திரம் அதிகரித்திருக்கின்றது. பூர்வ பவுத்தர்களெல்லாம் ராக்ஷசர்களென்று உரக்கக்கூற இந்துக்களுக்குப் பகைமை இருக்கின்றது. இந்துக்களெல்லாம் கருங்குரங்குகளென்று நிக்ஷயமாகச் சொல்ல, பார்ப்பார்களுக்கு அதிகாரமும், அறிவும் இருக்கின்றது. இவ்விதமான பொறாமை யுரைந்த இந்தியாவில் “யதார்த்த பிராமணன்' இருக்கின்ற னென்றால் அவனது லக்ஷணம் இன்னதென்று நமக்குத் தெரியவேண்டுமல்லவா? நாமெல்லாம் வேதத்தின் சிற்சில விதிகளைப் படித்திருந்தா