பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

49



மட்டும் பார்ப்பானென்பானுக்கு அவன் அடிமைகள் விலாப் புடைக்க தானம் செய்யவேண்டு மாம், பிராமணன் மரித்து விட்டால் அவன் பெயரால் ஆலயங்கள் கட்டிவைத்து அதில் ஒரு பிராமணனை பூஜாலியாக நியமித்து சாமிக்கு ஆராதனை என்று சொல்லி அவனிடம் எல்லாம் கொடுக்க வேண்டுமாம். எப்போதும் பிராமணன் வாங்கவும் அடிமைகள் கொடுக்கவுந் தான் விதியுள்ளதாம். இவ்விதமான மனிதன் ஜாதி பிராமணனா? அல்லது வேத பிராமணனா? என்று படிப்பவர்களே! நிதானித்துப் பாருங்கள். இந்த பிராமணர்களா லல்லவா? இராமன் ஒரு சூத்திரனே வெட்டினான். இந்த பிராமணனா லல்லவா? பிரகலாதனன் தன் தந்தையை இழந்தான், இந்த பிராமணனாலல்லவா? விபூஷணன் தன் சகோதரனுக்கு சூது விளைவித்தான். இந்த பிராமணர்களால் தற்காலம் இந்தியாபடும் பாட்டையாவது பார்த்ததில்லையா? யாராவது ஒருவன் பிராமணனாகலாம். அவன் தன்னிற்றானே தோன்றும் சிற்றின்ப துற்செயல் விருத்தியால் தேசங்கெட்டு சதா துக்கத்தில் அழுந்தி அழிவுபடாமல் தன்னிற்றானே தோன்றும் பேரின்ப நற்செயல் விருத்தியால் உண்மையுணர்ந்து சதானந்தத்தில் லயிக்கின்றான். தானடைந்த நன்னிலையை ஏனைய மக்களுக்கூட்டி பகுத்தறிவை பெருக்கச் செய்கிறான். அவன் சதா குடி.களிடத்தில் அன்புகொண்டிருக் கின்றான். தனக்கெட்டிய மூடக்கொள்கைகளை யும் ஆபாச சாஸ்திர சாங்கியங்களையும் அறுவெறுக்க அடிக்கடி போதிக் கின்றான். உலகம் சமதர்மத்தில் லயிக்க பாடு படுகிறான். மக்களுக்கு ஒரு வெளிச்சமாக இருக்கின்றான். அன்பு, ஈகை, சாந்தம் மூன்றையும் பெருக்கி யதார்த்த பிராமணனாக உலகத்தில் வாழ்கின்றான். இவனே பகவன் புத்தர் கூறும் அறிவுரு பிராமணன். இப்பிராமணன்தான் இக்காலத்தில் நமக்குத் தேவை. குடு மி, பூணு நூல், விபூதி அணிந்த பிராமணன் வேண்டாம். சமரசம், சன்மார்க்கம், நியாயவாதம். சகோதரத்வம் நிறைந்த பிராமணன் தான் இக்காலத்தில் நமக்குத் தேவை. முதற்குறித்த நான்கு தேவர்களும் அவர்களின் பிராமணர்களும், ஆதியிற் பிறந்தவர்கள்தான். பிறக்கும் போதே கூட இருந்தது.