பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

க. அயோத்திதாஸப் பண்டிதர்



பிராமணன், ஷத்திரியன், வைசியன். சூத்திரனென்னும் நான்கு ஜாதிகளுக்குமேல் ஐந்தாவது ஜாதி வேறு கிடையாதென்று கூறியுள்ள சாஸ்திரத்துள் சங்கர ஜாதி. அநுலோ மஜாதி, பிரிதிலோமஜாதி, அபோகஜாதி, க்ஷத்தாஜாதி, உக்கிர ஜாதி, வைதேகஜாதி, அந்தராளஜாதி, அமீர்ஜாதி, திக்குவணஜாதி, மாகதஜாதி, சூதஜாதி, புல்கசஜாதி, குக்குடஜாதி, வேணஜாதி விராத்தியிஜாதி, வாடாதானஜாதி, புஷ்பதன்ஜாதி, சைகன்ஜாதி, நிச்சுவிஜாதி, நடனஜாதி, கரணன் ஜாதி, கஸன்ஜாதி, கா ரூ சஜாதி, விஜன் மாஜாதி, மைத்திர ஜாதி, பாகியஜாதி. தகியுஜாதி, சையிந்திரியஜாதி, மைத்திரேயனஜாதி, மார்க்கவஜாதி, காருவாரஜாதி, வைதேகஜாதி, பாண்டு ஜாதி. சோபாகஜாதி, ஆகிண்டி ஜாதி, அந்தியாவஜாதி என்னும் முப்பத்தியேழு ஜாதிப் பெயர்களைக் குறித்திருக்கின்றார்கள்.

ஆயினும் பவுத்தர்கள் தொழில்களுக்கென்று வகுத்திருந்த பெயர்களே, தற்காலம் வழங்கி வருகிறதன்றி இந்நூதன மது சாஸ்திரத்தில் ஏற்படுத்தியுள்ள மேற்கூறிய ஜாதிகள் ஏதேனுந் தற்காலம் வழங்கி வருகின்றதா? அதுவுமில்லை. மநு ஸ்மிருதியினுள்ளும் பராசஸ்மிருதியினுள்ளும் பிராமணரென்றும் வேதியரென்றும் வழங்கும்படியானவர் களை, கடவுள் வேள்வி செய்வதற்கே உண்டு செய்தாராம். அங்ஙனம் வேள்வி செய்துவரும் பிராமணர்கள் தற்கால முண்டோ ? அதுவுமில்லை . எந்த பிராமணன் வேதத்தை யோதாமல் வேறு நூல்களை யோதுகின்றானோ! அவனை சூத்திரனென்றழைக்கக் குறிப் பிட்டிருக்கின்றது. ஆதலின் வேதத்தை யோதிக் கொண்டிருக்கும் பிராமணர்களுண்டோ ? அதுவுமில்லை . பிரமா பசுக்களை எக்கியத்திற்காகவே சிருட்டித்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதன் ஆதரவைக்கொண்டு தற்கால பிராமணர்கள் பசுக்களைச் சுட்டுத் தின்றுவருகின்றார்களா? அதுவுமில்லை. ஓர் சூத்திரனுக்கு மோட்சமாயினும், ஜீவனமாயினும் வேண்டு மானால், பிராமணனையே தொழுது வரவேண்டு மெனக் குறிப்பிட்டிருக்கின்றது. அதுபோல் சூத்திரர்கள்