பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

க. அயோத்திதாஸப் பண்டிதர்



வேஷப்பிராமணாள் கிரகித்து, கர்னல் போலியா ரவர்களிடத்திற் சிலரும் ஸர். ராபர்ட் சேம்பர்ஸ் அவர்களிடத்திற் சிலரும். ஜெனரல் மார்ட்டீன் அவர்களிடத்தில் சிலரும், ஸர் உல்லியம் ஜொன்ஸ் அவர்களிடத்திற் சிலரும், மிஸ்டர் கோல் புரூக் அவர்களிடத்திற் சிலருங் கொண்டுபோய்க் கொடுக்க அத்துரை மக்கள் இவர்கள் கொடுத்த கையேட்டுப் பிரிதிகள் யாவையும் மொழிபெயர்த்து ஒன்று சேர்த்து அச்சிட்டுப் பெரும் புத்தக மாக்கி இந்துக்கள் வேதமென்று சொல்லும் படியான ஒர் உருவமாக்கிவிட்டார்கள். அக்குப்பைக் கூளங்கள்தான் இக்காலத்தில் இந்து மத நூல்களாக இருக்கின்றன. புத்ததர்ம வாக்கியங்களும் அதன் சரித்திரங்களும் அதில் எவ்வகையிற் சேர்ந்துள்ள தென்னில், புத்தபிரான் அரச மரத்தடியிலுட்கார்ந்து ஐந்திந்திரியங்களை வென்றபடியால் ஐயிந்திரரென்றும், இந்திரரென்றும் அவருக்கோர் பெயருண் டாயிற்று. அப்பெயரைக் காரணமில்லாமல் இவர்கள் நூதன வேதத்தில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். புத்தபிரானாகும் இந்திரர், தேவர்களில் ஆதியாகத் தோன்றி . மற்ற மக்களுக்குந் தேவராகும் வழிகளை விளக்கி விவேகிகளாய் உலாவும்படிச் செய்தவராதலின் பவுத்த சரித்திரங்களில் அவரை வானவர்க் கரசனென்றும், வானவர் கோனென்றும் தேவேந்திரனென்றும், இராஜேந்திரனென்றும் வரைந்திருக்கின்றார்கள். வானவர்க்கரசன் இந்திரனென்றும் அவர் சரித்திரத் தையும் மற்றும் பவுத்த மார்க்க வரசர்களிற் சிலருடைய பெயர்களையும் அரஹத்துக்களுடைய பெயர்களையும் இவர்கள் நூதன வேதத்தில் வரைந்து வைத்திருக்கின்றார்கள். இன்னும் புத்த மார்க்கத்தைத் தழுவிய அனந்தம் பெயர்களையும் சரித்திரங் களையும் அதிற் காணலாம். சரித்திரக்காரர்கள் எழுதியுள்ள ஆதாரங்களின் படிக்கு கிறிஸ்து பிறப்பதற்கு அறுநூறு வருஷங்களுக்கு முன்பும் புத்தர் பிறந்த எழுநூறு வருஷங்களுக்குப் பின்பும் இந்தியாதேச முழுவதும் புத்தரது திவ்ய சரித்திரங்களும் அவருடைய சத்திய தருமங்களும் நிறைந்திருந்த தன்றி வேறு மதஸ்தர் வேதங்