பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

77


முண்டகோப உபநிஷத்து இரண்டாம் முண்டகம் முதலத்தியாயத்தில் ஜ்வலிக்கின்ற அக்கினியினின்று ஆயிரம் பக்கங்களில் பொரிகள் எப்படி யுண்டாகின்றனவோ அது போல் அழிவற்ற பிரமத்தினிடத்தின்று பல ஜீவாத்மாக் களுண்டாகி மறுபடியும் அதிலடங்குவாதாகக் குறிப்பிட்டிருக் கின்றது.

தலவகார் உபநிஷத்து இரண்டாவது காண்டம் 3, 4, 5-வது வாக்கியங்களில் பிரமத்தை அறியேனென்பவன் அறிவான். அறிவே னென்பவன் அறியான். பிரமந் தெரியுமென் பவர்களுக்குத் தெரியாது. தெரியாதென்பவர்களுக்குத் தெரியுமென்று கூறியிருக்கின்றது. கடோபநிஷத்து நான்காவது வல்லி 11-வது வாக்கியத்தில் மனதினால் மாத்திரமே அப்பிரமத்தை எட்டக்கூடு மென்று குறிப்பிட்டிருக்கின்றது. கேனோபநிஷத்து முதல் காண்டம் மூன்றாம் வாக்கிய முதல் எட்டாம் வாக்கியம் வரையில் அதைக் கண்ணாவது, வாக்காவது, மனமாவது எட்டுகிறதில்லை அதை நாம் அறியோம். அதை தெரிவிக்கும் வழியும் நமக்குத் தெரியாதென வகுத்திருக்கின்றது. பிரஹதாரணிய உபநிஷத்துத் துவக்கத்தில் குதிரையையே பிரமம் என சிந்தித்தும் வர்ணித்துமிருக்கின்றது. வாஜகாநேய உபநிஷத்து எட்டாவது வாக்கியத்தில் பிரமம் எவ்வித சரீரமுமற்றவர். ஒளி பொருந்தியவர், பாபமற்றவர், விவேகி, மனதையாள்பவரெனக் குறித்திருக்கின்றது. முண்டகோபநிஷத்து இரண்டாவது முண்டகம் எட்டாவது வாக்கியத்தில் கண்களாலாவது, வாக்காலாவது மற்ற இந்திரியங்களாலாவது, தபசினாலாவது, கர்மத்தினாலாவது பிரமத்தை கிரகிக்கப்படாதென்று குறித்திருக்கின்றது. அதே உபநிஷத்து பத்தாவது வாக்கியத்தில் இப்பர மாத்துமா அணுவைப்போல் வெகு சிறியவனாகவும் மனதினால் அறியதக்கவனாயு மிருக்கிறானென்று கூறியிருக்கின்றது. அதே உபநிஷத்து இரண்டாவது முண்டகம் இரண்டாவது அத்தியாயம் ஏழாவது வாக்கியத்தில் விவேக பரிபூரணனும்,