பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

க. அயோத்திதாஸப் பண்டிதர்



மனிதருடைய மூளைப் பழுது பட்டபின்பு அவர்கள் எதையும் ஆராய்ச்சிச் செய்ய முடியாது. முதலில் மதஸ்தா பகர்கள் சொல்லிவைத்த மத பித்தில் மூழ்கி பாபத்திற்கு ஒரு கடவுள், புண்யத்திற்கு ஒரு கடவுள், மோக்ஷத்திற்கு ஒரு கடவுள், நரகத்திற்கு ஒரு கடவுள், கண்களுக்கு தெரிய ஒரு கடவுள், தெரியாதிருக்க ஒரு கடவுள், சுருங்கச் சொல்லின், காற்று, மழை, கடல். பூமி முதலிய வஸ்துக்களும் கடவுளென்று ஏற்படுத்தி விட்டு அவர்களுடைய சந்ததிகள், வம்சங்கள் குலங்கள் ஜாதிகள், நாங்களே என்றும், எங்கள் மூலமே நீங்கள் சர்வ கைங்கர்யங்களும் செய்யவேண்டும், உங்களுடைய சுகபோகங் களுக்காகவே எங்களை பிர்மா பூமியில் படைத்து தரகுவேலைச் செய்ய, ஆக்ஞாபித்து, பஞ்சாங்கப் புத்தகத்தைக் கையில் கொடுத்து வைத்துள்ளார், என்று நமக்குச் சொக்குபொடி போட்டுவிட்டார்கள் - போட்டு வருகின்றார்கள். இங்ஙனங் கூறித்திரியும் கட்டுக்கதைகளுள், தங்களை ஆதி மனிதரென்றும், பூமியில் தங்களுக்குயர்ந்தவர்களொரு வருமில்லை. நாங்களே பூதேவர்கள் என்றும், நெடு நாளாக பொய் சொல்லி ஜீவித்து வந்திருக்கின்றார்கள். இவர்கள் தங்களை பிராமணர்களென்று சொல்லிக்கொள்ள கடமைப்பட் டிருக்கின்றார்களே அன்றி பிராமணர்கள் ஒழுக்கம் இன்னது, அதன்படி நான் நடந்து வருகிறவன், அல்லது எவன் அவ்விதம் நடக்கின்றானோ அவனும் பிராமணனே யாகுவான், எவன் நடவாமலிருக்கின்றானோ அவன் மெய்யாகவே நீச்சனாவா னென்று, வெளிவந்து சொல்லி பூர்வ பிராமணத்துவத்தை நிலைநாட்டக் காண்கிலோம். முற்காலத்தில் யாரோ சிலர் பிரமாவின் முகத்தில் பிறந்து வளர்ந்து வரும் கூட்டத்தார்கள் இவர்களே என்று குறித்து வைத்திருந்தாலுஞ் சரியே, அல்லது இன்னின்ன நூல் (வேதங்களைக் கையில் வைத்திருப்பவன், படித்துப் பார்ப்பவன், கேழ்கப்படிப்போன் பிராமணன் என்று குறித்து வைத்திருந் தாலுஞ் சரியே, அக்கூட்டங்களில் யாதார்த்த பிராமணன் இருந்தாலும் சரி, வேஷ பிராமணன் இருந்தாலும் சரி, இவ்விருவகை பிராமணர்கள் பிர பஞ்சத்தில் ஜீவித்திருந்தால் உலகிற்கு என்ன பலன் உண்டாகப்போகின்றது? எந்த ஏழை