பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

83



கின்றோம். காரணமோ மேற்கூறிய இருவகை பிராமணத்துவத் திற்கும் அப்புறப்பட்டவர்களாக, இக்கால பிராமண ஜாதிகள் உயிருடனிருக்கின்றன.

இப்படியாக நம் நாட்டு பிராமணன் நிலையை நாம் கூற வேண்டிய காரணமென்னவெனில், இக்காலத்திலிருப்பவர்கள் அந்தணர்களாயின், இவர்களுடைய ஒழுக்கத்தை நாம் நேரில் கண்டுள்ளோம். இவர்களது ஆதிகால நிலமை இன்னதென்று நாம் ஆராய்வதில்லை, ஆதிகால் அந்தணனுக் கொப்பானவனே இக்கால அந்தணனென்று நாம் சத்தியம் சொல்கின்றோம். இவனுக்காக சண்டைப் பிடிக்கின்றோம். இவனுக்காக நம் சகோதரர்களை இம்சிக்கின்ருேம். இதனால் பிராமண நிலையை அறிந்தோதுகின்றோமில்லை.

தன்னிற்றானே தோன்றும் சிற்றின்ப துற்செயல் விருத்தியால். தேகங்கெட்டு சதா துக்கத்திலாழ்வது போல், தன் அறிவு வளர்ச்சியால் தோன்றும், பேரின்ப நற்செயல் விருத்தியாம் உண்மை யுணர்ந்து, உலக போதகனாகவும், உலக நீதிமானாகவும், உலக ஒளியாகவும், சமதர்மத்திலும், சத்தியதர் மத்திலும் நிலைப்பதியல்பு. இவனே உலக மர்மத்திலிருந்து சித்திபெற்றோன். ஆதலால் தான் கீழ் உலகம், மேலுலகம், மோக்ஷம், நரகம், கடவுள், பேய் என்று பொய் சொல்லாமல் உண்மைப் பேசுகிறவனெவனோ. அவனே அந்தணனென்று சொல்லிவைத்தார்கள்.

காக்கைப்பாடியம்.

ஆதி காலத் தந்தண னறவோன் போதி வேந்தன் புகன்ற மெய்ஞ்ஞான நீதி நெறியாம் வாய்மையி னின்றோர் சோதி யுண்மைத் தொடருவ ரன்றே. இவ்வித அந்தணனை நாம் இக்காலத்தில் காண்பதரி தாகையால், உண்மையில் அறிவை வளர்த்தி, இந்நூல் முற்றும் வாசித்து பகவான் புத்தர் போதித்த சுயசமதர்மபோதகத்தைக் கைப்பற்ற மனந்திரும்பும்படி சுதேச தெய்வ தூதர்கள் வேண்டு கின்றோம். முற்றும்.