பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை



பாரம்பரிய மான பழக்கங்களில் கவனஞ் செலுத்தி, புத்திக்கும், ஞாயத்திற்கும் விரோதமான நம்பிக்கை வைத்து. கடவுள், மதம், வேதம், ஜாதி, ஆசாரம் என்ற ஐந்திழை முருக்கேறிய கயிற்றில் பிணிக்கப்பட்டு, மனிதனை, மனிதன் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்ற மூ.. ரூ பகாரஞ் செய்து, மரண காலமட்டும், பிறத்தியானுக்கே அடிமைப்பட்டு, அவனால் எழுதி வைக்கப்பட்ட பொய் நூற்களில் புரண்டு, அவனை தெய்வமென்று புகழ்ந்தும், இந்தியரை அவனுக் கடிமை என்று இகழ்ந்தும் வருவது ஒரு சார்பான இந்திய மக்களுக்கு இயல்பாகும். "மாற்றானுக்கிடங்கொடேல்" என்ற வசனம் கவனத்திற்கு வராமல் மூளையைப் பொய்மைக் காவல் காக்கின்றது. அக்காவலான பொய்மையே பிராமண மாகும். அப்பிராமண மூட பழக்க பண்டிகையை வணங்கி வருவதோடு, அது எங்களுடையதென்று பொய் சத்தியஞ் செய்ய வைக்கின்றது. அந்த சத்தியத்தைத் திறந்து காட்டுதல் குற்றமாகாது. "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை" என்ற பெரியோர் வாய் மொழிபடியே! “பிரமன் தலை சிவன் கையில் ஒட்டிக்கொண்டதே கபாலீஸன் கதை" என்று குற்றமாகக் கூறும்; நம் இந்து சகோதரர்களுக்கு அவர்களுடைய குற்றங்களொழிய இந்த கபாலீஸன் கதை ஆராய்ச்சியைப் புகல்கின்றோம். அன்பார்ந்த சகோதர சகோதரிகள் இச் சரித்திரங்களைச் சீர்தூக்கிப் பார்த்து எது யதார்த்தமோ அதை கையாள கேட்டுக்கொள்கின்றோம். 2475 ஆங்கீரஸளும் புரட்டாசி மீ ஸ்ரீ சித்தார்த்தா புத்தக சாலையார்.