பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 க. அயோத்திதாஸப் பண்டிதர் சந்நிதானத்தருகில் கொலையுண்டதால், அந்நாய் மறு ஜன் மங்களிலே அரசர்களாகப் பிறந்து, பூலோகத்தை யாண்டு, கைலாயப் பதவி யடைய சிவன் ஆக்ஞாபித்தாராம். சிவராத்திரியும், சிவன் கபால பாத்திரம் பெற்ற கதைச் சுருக்கமும், இவ்வளவேயாகும். இனி மேற்குறித்த இரண்டு கபால மூர்த்திகளின் கதா கருத்துக்களை ஆலோசிக்கலாம். அத்தியாயம் 3 தெளிதல். சகோதரி சகோதரர்களே! சிவராத்திரி மகுத்துவத்தைப் பற்றியும், பிச்சையேற்ற கரபோலீஸன் கதையையும் கபாலம் பெற்ற விதத்தையும், கொஞ்சம் பரியாலோசிக்கலாம். நாம் பழமையான கதைகளையும், தெய்வங்களையும் பகுத்துப் பாராமலே கொண்டாடியும் வணங்கியும் வருகின்றோம். இதில் எது பொய்யென்றும், மெய்யென்றும் ஆலோசிக்கப் பிரியப் படாமலே காலங் கழிக்கின்றோம். நாம் அநுசரிப்பவைகள் இன்ன மதத்தது என்று நமக்கு தெரியவில்லை. அதை உண்மைப்படுத்த அது இப்படி , அப்படி என்று சொல் கின்றோம். நம் பெரியோர்களும் பலவாறாக எழுதி வைத்து விட்டார்கள். அவைகளை நம்முடைய அறியாமையால் மெய்யென்று சாதிக்கின்றோம். மயிலைக் கரபோலீசன் மடம் சாக்கையர்களுடைய தாகும். அவர்களால் கைவிடப்பட்டு, சைவர்கள் கைவரப்பெற்ற பின்னர், அல்லது இதுகாலமட்டும், அம்மடம் எங்களுடைய தென்று வள்ளுவர்கள் வெளிவராமலிருக்கின்றார்கள். அம்மடத் தை தூர நின்று வணங்குகின்றார்கள். பேதை மக்களுக்கு சாஸ்திரஞ்சொல்லும் பழஞ்சாக்கையர்களே! தங்கள் மடம், தங்களுக்கு எக்காலத்தில் கிடைக்குமென்று, ஜோஷியம் பாராமல், வாளாயிருந்து வருகின்றார்களென்றால், மற்றவர்களுக் கென்ன சொல்வது? வள்ளுவர்கள் தாழ்ந்தவர்கள், இந்துக்கள் உயர்ந்தவர்கள், தாழ்ந்தோர் தெய்வம் உயர்ந்தோருக்கு சொந்த மாயின் இந்துக்களும் தாழ்ந்தவர்களே என்று நியாயங்காட்டி. உரிமைப்பெறாமல் உள்ள வள்ளுவர்கள் மதிமயங்கியவர்கள்