பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ 8 க. அயோத்திதாளலப் பண்டிதர் 87. மனந்தடு மாறேல், மனம்-ஒன்றையெண்ணி, தடு-மந்ருெழன்றை, மாறேல்பிறழாதே என்பதாம். ஊனக்கண் பார்வையிராது நடக்கில் உடல் தடுமாறுவது போல், உள்விழிபார்வையாம் கியான நிலை தவரி மனந்தடு மாறுவ தியல்பாதலின், எக்காலும் விழிப்பினின்று மனந்தடு மாறும் செயலாலுண்டாகும் துக்கவிருத்திகளையும், மனந்தடு மாருச் செயலாலுண்டாகும் சுகவிர்த்திகளையும், காட்சியின நுபவத்தா லுணர்ந்து கியானக் கண் நிலைப்பதற் காய் மனந்தடுமாறேல் என்று கூறியுள்ளாள். 88. மாற்ருனுக் கிடங்கொடேல். மாற்ருனுக்கு-வாக்கிலொன்று மனதிலொன்றுமுள்ள வன்னெஞ்சனுக்கு, இடம்-நெருங்கிய இல்லத்தைக் கொடேல்-நீ கொடுக்காதே யென்பதாம். அதாவது உள்ளத்தில் மாறுபட்டவனும் மனதில் மாறு பட்டவனும் செய்கையில் மாறுபட்ட வனுமாகிய வன்னெஞ்ச சத்துருக்களுக்கு இடங்கொடே லென்று வற்புறுத்திக் கூறியுள் ளாள். மாற்ருனென்பது கூற்றனென்பவனுக்கும் பொருளாத லின், காலனுக்கிடங்கொடேலென்பதும் மற்ருேர் பாடபேத மாகும். காலனுக் கிடங்கொடுக்கும் வழிகள் இராகத்துவேஷ மோகங்களேயாகும். இம்மூவழிகளிலும் இடந்தரா தகற்றி, யாள்வதே ஜாக்ரதையாம். 89. மிகைபட சொல்லேல். மிகை-துன்பத்தை, பட-உண்டாக்கத்தக்க வார்த்தையை, சொல்லேல்-நீ மறந்தும் பேசாதே என்பதாம், அதாவது உனது குமாரன், குளத்தில் முழுகி விட்டான், உன் கணவனை அடித்துவிட்டார்களென்று வேடிக்கையாக சொல்லும் வார்த்தைகள் கொடு வினையாக முடிந்து பலவகை துன்பத்திற்காளாக்கி விடுகிறபடியால் திடீரென்று மக்களுக்குக் கேட்டையுண்டாக்கத்தக்க வார்த்தைகளைப் பேசலாகாதெனும்