பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்டிர் நிலை

97

நடந்து சென்ற வரலாறு, கேட்போரது உள்ளத்தையுருக்கும் தன்மையினதாகும். கண்ணகியாருடைய சீறடிகளின் மென்மையினையறிந்து அவர்தம் மென்மைக்கேற்ப சில மகள் நெகிழ்ந்து கொடுக்கவில்லையேயென அவருடன் சென்ற கவுந்தியடிகள் இரங்குகின்றார், வெயிலின் வெம்மையால் தம் கணவனது உடல்வாடியதே என்று நடுக்கமுற்று வருந்திய நிலையில் தம் துயரத்தினை ஒரு சிறிதும் உளங் கொள்ளாத பெருமை கண்ணகியாரிடம் அமைந்திருந்தது. 'இவ்வாறு இனிய வாழ்க்கைத் துணையாகிய மகளிர்க்கு இன்றியமையாத கற்பு மாண்பினையுடைய கண்ணகியாகிய இத்தெய்வமல்லது இதனினும் சிறந்த அழகுமிக்க தெய்வத்தை யாம் கண்டிலேம்!' எனக் கவுந்தியடிகளாகிய தவச் செல்வியார் கண்ணகியாரைப் புகழ்ந்து போற்றுகின்றார். 'பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு கால மழை பொய்த்தறியாது ; விளைவு குறைந்து வளம் பிழைத்தலை அறியாது ; வேந்தரது வெற்றி சிதைந்தறியாது,' என நல்லார் பலரும் பாராட்டியதற்கேற்பச் செங்குட்டுவன் என்னும் சேரமன்னன் பத்தினித்தெய்வமாகிய கண்ணகியார்க்குக் கோயிலெடுத்து வழிபாடு நிகழ்த்திய செயலினையும் அதனை உணர்ந்த ஏனைய தமிழ் வேந்தர்களும் இலங்கை வேந்தனாகிய கயவாகுவும் தங்கள் தங்கள் நாட்டிற் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியாரை வழிபட்ட இயல்பினையும் சேரமுனிவராகிய இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகப் பாராட்டினமை இவண் கருதற்குரியதாம்.

அமிழ்தினும் இனிய உணவினைச் சுவை மிகச் சமைத்துத் தம் கணவனை உண்பித்தலிற் போார்வமுடையராதல் பெண்டிரின் இயல்பாகும். தான் அன்பினாற் சமைத்த நல்லுணவினை மிகவும் இனியது எனச் சொல்லித் தன்