பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சங்ககாலத் தமிழ் மக்கள்



இதனைத் தனி நிலமாக எண்ணுவதில்லை. நீரும் நிழலுமில்லாது வெதும்பிய சுரத்தில் எந்த உணவும் விளைவதில்லை. இங்கு வாழ்பவர் உழவு முதலிய தொழில்களுள் ஒன்றையும் செய்தற்கு வசதியில்லாமையால், வழிப் போவாரைத் துன்புறுத்திப் பொருள் பறிக்கும் கொடுங் தொழிலை மேற்கொள்வாராயினர்.

நானிலமக்கள் தங்கள் ஊர்தோறும் தங்களுக்கேற்ற தலைவனொருவனது காவலின்கீழ் அடங்கி வாழ்ந்தார்கள். குறிஞ்சி நிலக் தலைவனை வெற்பன் என்றும், முல்லை நிலத் தலைவனைக் குறும்போறை நாடன் என்றும், மருதநிலத் தலைவனை ஊரன் என்றும், நெய்தல் நிலத்தலைவனைத் துறைவன் என்றும் வழங்குதல் மரபு. இத்தலைமக்களால் ஆளப்படும் சிற்றூராட்சியே முதன்முதல் தோன்றியது. ஒவ்வொரு சிற்றூர் மக்களும், தங்களால் நன்கு மதிக்கப்படும் அறிவும் ஆற்றலும் உடைய தலைமகன் ஒருவனது சொல்லுக்கு அடங்கி, அவனது காவலில் அச்சமின்றி வாழ விரும்பினார்கள். இவ்விருப்பம் நாளடைவில் வளர்ச்சி அடையத் தொடங்கியது.

இயற்கையில் விளந்த உணவுப் பொருளைக்கொண்டு விலங்கு முதலியவற்றை வேட்டையாடி வாழ்ந்த வாழ்வு,மலைவாணர் வாழ்வாகும். உணவுக்குரிய விதைகளைப் புன்புலங்களில் விதைத்து, ஆடுமாடுகளை வளர்த்து, அவற்றாற் கிடைக்கும் பால் முதலிய பயன்களைப் பெற்று வாழும் வாழ்வு முல்லைநில வாழ்வாகும். காடுகளை அழித்து நாடாக்கிப் புன்புலன்களைத் திருத்தி நன்செய்களாக மாற்றி, எருது முதலிய விலங்குகளைத் தொழில்களிற் பழக்கி, உழவினால் உணவுக்கும் உடைக்கும் வேண்டுவனவற்றை விளைவித்த செயல் மருதநில நாகரிக-