உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

43



இயற்றமிழ் வல்லவர் புலவர்; இசைத்தமிழ் வல்லவர் பாணர்; ஒருவரையொத்து நடிப்பவர் பொருநர் ; ஒரு வரலாற்றை நடித்துக்காட்டுபவர் கூத்தர் ; உள்ளக்கருத்துக்கள் தம் உடம்பின்கண் நிகழும் மெய்ப்பாடுகளினால் விளங்கித் தோன்றும்வண்ணம் விறல்பட ஆடும் மகளிர் விறலியர். இவர் எல்லாரும் தாம் கற்றுவல்ல கலைத்திறத்தால் மக்களுடைய மனப்பண்புகளை வளர்ப்பதனையே தம்முடைய நோக்கமாகக்கொண்டு வாழ்ந்தனர். மேற்குறித்த புலவர் பாணர் முதலியவர் கலைத்துறையிலே கருத்தைச் செலுத்த வேண்டியிருத்தலால், பொருளீட்டுதற்குரிய மெய்ம்முயற்சியில் ஈடுபட்டு உழைத்தற்குரிய ஆற்றலற்றவராயினர். இவர்களுக்கு உணவும் உடையும் பிறவும் வழங்கிப் போற்றுவது மக்களது கடமையாகக் கருதப்பட்டது.

கலைவாணர் தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் முயற்சியிற் கருத்தினைச் செலுத்துவராயின், தமக்குரிய கலைத்துறையில் முழுதும் திறமையடைதல் இயலாது. ஆகவே, தெள்ளிய அறிவினராகிய இக்கலைவாணர்களுக்கும் பொருட்செல்வத்திற்கும் ஒரு சிறிதும் தொடர்பில்லாமையே உலகியலாய் அமைவதாயிற்று. அறிவுச் செல்வத்தை ஈட்டும் ஆர்வத்தால் பொருட்செல்வத்தை நெகிழ விடுதல் புலவர் முதலியோரியல்பாகும். பொருட்செல்வத்தைத் தேடும் முயற்சியால் அறிவுத்துறையிற் கருத்தின்றி ஒழுகுவது பொது மக்கள் இயல்பாகும். இவ்விரு வகையான உலக இயல்பினைத் ‘திருவேறு ; தெள்ளியராதலும் வேறு,’ என வரும் திருக்குறளால் அறிக.

கலைவாணர்களின் கல்வியை மதித்துப் பரிசில் தந்து பாராட்டுதலைத் தமிழ்மக்கள் தங்கள் கடமையாக எண்ணினார்கள். செல்வனொருவனை அடைந்து, எனக்கு ஒரு