பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடவர் நிலை

77


கினை அறுத்த அரிதாள் குறைவாய் இருந்தபடியால், எருதுகளைக்கொண்டு மிதிக்கவிடாமல், இளைஞர்கள் தங்கள் கைகளாலே அரிதாள்களை அடித்து வரகினைக் குவித்தார்கள். தன் நிலத்தில் விளைந்த வரகிற் பெரும்பகுதியினை அவ்வீரன் தன் கடன்காரர்களுக்குக் கொடுத்து விட்டு, எஞ்சியதனைப் பசிமிக்க பாணர்களுக்குக் கொடுத்தனுப்பினான், தன் குடும்பத்தார் பசியினை நீக்குதற்குச் சிறிதுகூட விளைபொருள் இல்லாமையால், மீண்டும் பிறர்பாற்சென்று வரகினைக் கடனாகப் பெற முயன்றான். இவ்வாறு உலக நடையினை உணர்ந்து நடந்துகொண்ட தமிழ் மறவனது பண்புடைமையினைப் புலவரொருவர் புறப் பாடலொன்றில் (327) சுவை மிக எடுத்துரைக்கின்றார். இதனால், அரசரை வெல்லும் பெருவன்மையுடைய வீரர்களும், தங்கள் மனம் போனபடி வரம்பு கடந்து ஒழுகாமல், உலகியல் வரம்புக்கு உட்பட்டு, வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து, அறத்தின் வழியொழுகினார்கள் என்பது பெறப்படும்.

ஆடவர் தமக்கு எதிரில்லாதபடி தமது ஆண்மைத் தன்மையை மேன்மேலும் போர்க்களத்திற் புலப்படுத்துதலையே தம்முடைய பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர். காவற்பெண்டு எனக் குறிக்கப் பெற்ற பெண்பாற் புலவருடைய மகனொருவன், பெருவீரனாய் விளங்கினன். அவன் எப்பொழுதும் போர்செய்தலையே பொழுது போக்காகக் கொள்ளும் ஆண்மை மிக்கவனாவன். அவனைக் காணச் சென்ற நண்பனொருவன், அவன் தாயினைப் பார்த்து, 'நின் மகன் எங்கேயுள்ளான்?' என வினவி நின்றான், அதுகேட்ட அவ்வீரனுடைய தாய், அவனை நோக்கி, ' “நின் மகன் எங்கேயுள்ளான் என்று என்னைக்