உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சேரர்

நடுவுநிலை திரியா நன்னெறியுடையான் ; இவற்ருலெல்லாம் அவன் அழியாப் புகழ், உலகெலாம் சென்று பாவிற்று; வாளின் வன்மையும், கோலின் செம்மையும் விளங்க ஆண்ட அவனே, அறனறிந்து மூத்த அறிவுடையார் அனைவரும் மகிழ்ந்து வாழ்த்தினர் எனக் கூறுவர் பெருங்குன்றார் கிழார் எனும் புலவர் பெருந்தகையார் :

' மீன்வயின் நிற்ப, வானம் வாய்ப்ப, அச்சற்று எமமாகி, இருள் தீர்ந்து, இன்பம் பெருகத் தோன்றித், தம்துணைத் துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக், கழிந்தோர் உடற்றுங் கடுந்த வஞ்சா ஒளிறு வாள் வயவேந்தர், களிருெடு கலம் தக்து, தொன்று மொழிந்து தொழில் கேட்ப, அகல் வையத்துப் பகலாற்றி, மாயாப் பல்புகழ் வியல்விசும்பு ஊர்தர வாள்வலி அறுத்துச் செம்மை பூஉண்டு, அறன் வாழ்த்த நற்காண்ட விறல் மாந்தான்்.' (பதிற்று : கூ0) மாத்தான்் பொறையன் கடுங்கோ, கொடுத்துப் பழகிய கையுடையான்; அவனேப் பாடிச்செல்லும், பாணர், கூத்தர், பொருநர் முதலாம் இரவலர், தம் வறுமை தீரப் பரும்பொருள் பெற்றன்றி மீளார் ; அவன், பகைவரான் தடுத்து நிறுத்தப்படாப் பெரும்படையும், போர் வெல்லும் பேராண்மையும் பெற்றவன் என்றெல்லாம் பாராட்டி மகிழ்வர், முதுபெரும் புலவராய பரணர் :

இலமல ரன்ன அஞ்செங் நாவின் புலமீக் கூறும் புரையோர் எத்தப் பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல் நிறையருங் கானை வெல்போர் மாந்தாம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல நன்றும்

உவவினி வாழிய நெஞ்சே." (அகம் : க.ச.உ)