பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சேரர்

பேட்ட அருமுன்பின்

பெருந்தளர்ச்சி பலர் உவப்பப் பிறிதுசென்று மலர்தாயத்துப் பலர் நாப்பண் மீக்கூறலின்.” (புறம்: க.எ)

யானேக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, மற்றொருகால், இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளியோடு போரிட்டான் ; இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளியும், பேராசர் பலரை வெற்றிகொண்ட பேராற்றல் வாய்ந்த வனே எனினும், அவனைப் பெருஞ்சேரல் இரும்பொறை எளிதில் வெற்றிகொண்டிருப்பன் ; ஆனல், பெருகற்கிள்ளி தன் படைத் துணையாகப் பெருவீரன் ஒருவனேப் பெற்று விட்டான் ; தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளதும், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டதுமான நாட்டை, மலையர் அல்லது மலையமான்கள் என்பார் ஆண்டு வந்தனர்; அவருள் திருமுடிக்காரி என்பவன் சிறந்தவ குவன் ; தேர்வண் மலையன் எனவும் அழைக்கப் பெறும் இவன் போற்றல் வாய்ந்தவனுவன் ; தனக்குரிய முள்ளூர் மலையினேக் கைப்பற்றக் கருதி வந்த ஆரியப்படையை அலறத் தாக்கி அழித்துத் துரத்திய ஆண்மையாளன் ; கொல்லி மலைக்குரிய வல்வில் ஒரியை வென்ற வீரம் செறிந் தவன்; பகைவர் காட்டுப் பசுநிரைகளைக் கவர்ந்து வரு வதில் தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லா உரனுடைய வன் ; பேரரசர் மூவர்க்கும் படைத் துணை போகும் பெரும்படை வலியுடையான் ; இத்தகைய யானைப்படைத் துணையாக் கொள்வதில், இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி முந்திக்கொண்டான் ; அவன் பகைவர் பக்கம் படைத்துணையாகிவிடவே, மாந்தரஞ்சேரல் இரும்பொறை யால், சோழனே வெற்றிகோடல் இயலாது போயிற்று ; தோற்றுவிட்டான் ; காலில் கழல் ஒலிக்கக் களம் புகுந்து கடும்போர் ஆற்றி வெற்றிகொண்ட தேர்வண்மலையன், சோழனுக்குத் துனே வராகிருந்தால், அச் சோழனே வெற்றிகோடல் எளிதில் முடிந்திருக்கும் ; வென்ருேன் சோழன் அல்லன் ; தேர்வண்மலையனே' என மாந்தரஞ்