உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சோழர்

ளாலும் அழைக்கப்பெறுவர். இப்பெயர்களுள், கிள்ளி என்பது தோண்டுதல் எனப் பொருள்தரும் கிள் என்ற சொல்லடியாகப் பிறந்ததாம்; வளவன் என்பது, காடு கொன்று நாடாக்கிக் குளம்தொட்டு வளம்பெருக்கியோர்', அல்லது வளம்மிக்க நாட்டை ஆள்வோர் என்ற பொருளில் வழங்குவதாம். செம்பியன் என்பது, தன்பால் அடைக் கலம் புகுந்த புருவின் பொருட்டுத் துலேபுக்க சிபி மன்னன் மரபினர் என்ற பொருளுடையதாம்.

சோழ அரசின் தோற்றமும், தொன்மையும் அறிய இயலாதனவாதலைப் போன்றே, அவர் பெயரின் தோற்றக் காரணமும் அறிய இயலாத காம்; ஆரியர்க்குமுன் தென்னுட் டில் வாழ்ந்த கருப்பு மனிதர் என்ற பொருளில் வழங்கும் கால அல்லது கோல என்ற வடமொழிச் சொல்லினின் றும் வந்தது என்பர் சிலர்; சோளம் விளையும் நாடு சோள நாடு'; அது சோழநாடு என ஆயிற்று என்பர் மற்றும் சிலர்; திருடன் என்ற பொருளில் வழங்கும் சோரன்” என்ற சொல்லிலிருந்து, சோழன் என்ற சொல் வந்தது

என்பர் வேறு சிலர்.

சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தவர் என்ற சிறப்பு, பாண்டியர்க்கு உரியது என்ற பழைய வழக்குள தெனினும், பாடினுேர், பாடப்பட்டோர் வரிசையில் சோழமன்னர் பலர் இடம்பெற்றுள்ளனர் ஆதலாலும், சோழர் தலை நகருள் மிகப் பழையதாகிய உறையூர், புலவர் பலர் தோன் றித் தொழிலாற்றிய இடமாக இருத்தலாலும், தமிழ் வளர்த்த பெருமை, சோழர்க்கும் உரித்து என அறிக.

தமிழகம், தென்பாண்டி நாடு, குட்டநாடு, குடகுநாடு, கற்காகாடு, வேணுடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவா வடதலைநாடு, சீதநாடு, மலைநாடு, புனல்நாடு எனச் செந்தமிழ் கிலம்சேர் பன்னிருகிலமாகப் பிரிக்கப்பட் டிருப்பவும், தென்பாண்டி காட்டார், ஆவினேப் பெற்ற மென்றும், சோற்றைச் சொன்றி என்றும், குட்டநாட் டார் தாயைத் தள்ளேயென்றும், குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர்