பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சோழர்

யாகப்பெற்ற நெல்லொடு வந்த படகுகள் பல, வரிசை

யாகப் பிணிக்கப்பெற்றிருக்கும்.

வீட்டின் முன்னிடத்தோறும் உணவுப் பொருள்களே உலர்த்திவிட்டுக் காவல்புரியும் மகளிர், அப் பொருள்களை உண்ண வரும் கோழி முதலாம் பறவைகளே ஒட்டுவான் வேண்டித் தம் காதணிகளேயே கழற்றி அவற்றின் மீது எறிவர்; அவர்கள் அவ்வாறு எறிந்த குழைகள், நடை பயில் சிறுவர், அவ் வழியாக ஒட்டிவரும் முக்கால் சிறு தேரைப் போகவொட்டாமல் தடை செய்யும் அத்துணைச் சிறந்த செல்வமுடையது சோனடு ; சிற்றார் வாழ் ஆடவர், தம் தொழில் முடிந்த ஒய்வுக் காலங்களில், இருவின் சூட் டையும், ஆமைப் புழுக்கலையும் உண்டு, ஊர் மன்றங்களில் ஒன்றுகூடித் தம் தம் ஆற்றல் தோன்ற ஒருவர் மெய், ஒருவர் மெய்யொடு பொருங்க மற்போர் புரிந்தும், ஆட்டுக் கிடாய்ப் போர், கோழிப் போர் முதலாயின கண்டும் களித்து வாழ்வர். இவ்வாறு வளம்மிக்க சிற்றார் பல

நிறைந்தது சோனடு.

சோனுட்டு ஆடவரும், மகளிரும் தம் உடற்பிணி

போகக் கடல்நீரில் குளித்துப், பின்னர்க் கடல்நீர் பட்ட தால் உண்டாகிய உப்புப்போன்ற் மாசு போகுமாறு கடலைச் சார்ந்துள்ள நல்ல நீர் கில்ேகளில் படிந்து ஆடியும் வருவர்; அவர்கள், மாலைவேளையில் பாடல் ஒர்ந்தும், நாடகம் கயங் தும், வெண்ணிலவின் பயன் துய்ப்பதற்காக மாகாவிரி மணவினும், கடற்கரைச் சோலைகளினும் தங்கித் துயில் கொள்வர். சோணுட்டார், பகலில் உடுத்த பட்டாடையை நீக்கிவிட்டு, இரவிற்கான மெல்லிய துகில் உடுத்துமளவு

உயர்த்த நாகரிகம் உடையவராவர்.

சோணுட்டு நகரங்களாகப் புகார், உறையூர், அழுக் துர், ஆவூர், வெண்ணில், இடையாறு, குடந்தை முதலா யின பண்டை இலக்கியங்களுள் கூறப்படினும், அவற்றுள் சோணுட்டுத் தலைநகரங்களாகச் சிறப்புப் பெற்றன புகாரும், உறையூருமேயாம். -