பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சோழர்

அங்கே தன் ஆணையை கிறுவிய காலமுதலா, அம்மலை அவ்வாறு பெயர்பெற்றது போலும் என்று கருத இடம் தருகிறது; இமயத்துக்கப்பாலும், அவ் வளவன் செல்லக் கருதியிருந்ததை அம்மலை தடுத்துவிட்டதாக இளங்கோ வடிகள் குறிப்பிட்டதற்கு, மேற்குறித்தபடி அச் சோழன் சென்ற காலத்தே பனியால் முழுதும் மூடப்பட்டு அக்கண வாய் அடைப்பட்டிருந்தது என்பதே கருத்துப் போலும்." (கலைமகள் : 1982 : Vol. 1 , Page 62, 68) எனக் கூறும் திருவாளர், மு, இராகவையங்கார் கூற்முன், கரிகாலன் வடநாட்டு வெற்றி உறுதியாதல் காண்க.

கரிகாற்பெருவளத்தான்், காவிரிக்கு இரு மருங்கும் கரை அமைத்து, அணைகட்டி ஆண்டான் என்ற வரலாறு ஒன்று கூறப்படுறது; இங்கிகழ்ச்சியைப் பழந்தமிழ் பாக் கள் குறிப்பிடவில்லை எனினும், விசயாலயன் வழிவந்த சோழர் கல்வெட்டுக்களிலும், தெலுங்குச் சோழர் செப் பேடுகளிலும், விக்கிரம சோழன் உலா முதலாம் பிற்காலத் தமிழ் நூல்களிலும், நவசோழ சரிதம் போலும் தெலுங்கு நாலிலும், மகாவம்சம் என்ற இலங்கை வரலாற்றுத் தொகுப்பு தாலிலும் அங்கிகழ்ச்சியின் பல்வேறு விலைகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

கரிகாலன், காவிரிக்குக் கரை அமைத்தான்்; கரி காலன், காவிரிக்குப் பகையரசர் துணைகொண்டு கரை அமைத்தான்் ; காவிரிக்குக் கரை கட்ட வராத மன்னன் கண்ணேப் போக்கினன் கரிகாலன் , அங்ங்னம் கரை கட்ட வராதவன் முகரி எனும் பெயருடையனவன் ; முகரியின் உருவைப் படத்தில் எழுதி நோக்க அதில் அவனுக்கு மூன்று கண் இருப்பது கண்டு, அவன் வாமைக்குக் கார ணம் இதுவே என்றுகொண்டு, படத்தில் அம் மிகைச் கண்ணே அழிக்க அவனுடைய உண்மைக் கண் போயிற்று; கரிகாலனல் கண்ணிழக்கப் பெற்றேன் திரிநயனப் பல்ல வனே என்றெல்லாம் கூறுகின்றன. அக் கல்வெட்டுக்களும்,

செப்பேடுகளும், பிற்கால இலக்கியங்களும் :