பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 69

வேண்டுவது நிலம் தரும் விளைவில் ஆறில் ஒன்றே ஆதலின், விளையாத ஆண்டில் அரசன் இறை வாங்காது விடுத்தல் வேண்டும். ஆனல், வளவன் அரசியல் அலுவலர் அவ் வாறு செய்யாது, அதைக் கடனுகவே கருதி அடுத்துவந்த ஆண்டில் அதையும் சேர்த்துத் தண்டுவாராயினர்.

அதனுல் வருந்திய குடிகளுள் ஒருவராய வெள்ளேக்குடி நாகனர், வளவனே அடுத்து, காவலன் காட்சிக் கெளியணுதல் வேண்டும் ; கடமையில் தவருமை வேண்டும்; அவை யிரண்டும் அவன் கீழ்ப் பணியாற்றும் அலுவலரிடத்தும் நீங்காது கிற்றல்வேண்டும் என்றும், தன் நாட்டு மக்கள் நல்வாழ்விற்காம் பொருளிற்குப் பிறநாடுகளை எதிர்நோக் காத காடே தனிசிறந்த நாடு; அத்தகு காட்டில் வாழ்வார், அவ்வளம் பெருக வழிசெய்யும் தம் அரசு அழியாது வாழ விரும்புவர். அதற்குக் கேடுண்டாம் என அறியின், அதை இழந்து வாழ்வதினும் அழிந்து மறைவதே மாண்புடைத் தாம் என்ற மனநிறைவுடையவராய்க் களம் புகுவர். அவ் வெண்ணம் உடையார்தம் உள்ள உானே அழிக்கும் ஆற்றல் உலகில் எத்துணைச் சிறந்த படையாளர்க்கும் இல்லை. ஆதலின், களத்தே அவ்வில்லேருழவர் பெறும் வெற்றி, நாட்டில் நல்லேருழவர் தரும் நற்பயனின் விளைவாம் ஆத லாலும், தன் நாடு வளம் பல செறிந்த கல்ல நாடாதல் கானும் பிறநாட்டு மக்கள் இத்துணை வளங் கொழிக்க ஆளும் அரசே தங்கள் காட்டினும் அமைய விரும்புவர் ; அத்தகைய எண்ணம் கொண்ட மக்கள் கிறைந்த ஆட்சி யைப் டோர்புரிந்து கைப்பற்ற வேண்டியதும் இல்லை; அங் காட்டு மக்கள் தாமே முன்னின்று, தம் நாட்டில் உள்ள ஆட்சியை அழித்துவிட்டு, இவன் எல்லாட்சியினை விரும்பி வரவேற்பர். ஆதலின், உலகெலாம் ஆள ஆசைகொள்ளும் அரசர்க்கும் உறுதுணைபுரிவோர் அவ்வுழவரே ஆதலாலும் நாட்டிற்கு அாணுக கிற்கும் அவ்வுழவர்க்கு கல்லன செய் தலை அாசன் நாடோறும் அறிந்து மேற்கோடல் வேண்டும் என்றும் அறிவுரை கூறினர். புலவர் கூறியன கேட்ட குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், புலவர் கிலத்திற்.