உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருஞ் சோழன் 77.

கோப்பெருஞ் சோழனைப் போன்றே பிசிராங்தை யாரும், கோப்பெருஞ் சோழன் புகழ்பாடுவதையே தம் பண்பாகக் கொண்டிருந்தார் ; மாலைக்காலத்தே, தெற்கி னின்றும் வடக்கு நோக்கிப் பறந்த செல்லும் அன்னத்தை நோக்கி, ' உறையூரில், என் நண்பன் கோப்பெருஞ் சோழன்பால் நேரே சென்று, நான் ஆந்தையார்பால் அன்புடையேன் என்று கூறின், கின் அன்புடை மனைவி யணியுமாறு தன் அழகிய அணிகள் அத்தனேயும் அளிப் பன் என்று கூறியும், கின் நண்பன் யாவன் அவனுறை யும் இடம் யாது ' என்றெல்லாம் கேட்பார்க்கு, என் தலைவன் உறையூரை வாழ்விடமாக் கொண்டவன் ; கோப் பெருஞ் சோழன் எனும் பெயருடையான் ; சிறந்த நண்ப கிைய பொத்தியார் என்ற புலவரோடு கூடி மகிழ்ந்துறை யும் இயல்புடையான் ' என விடையளித்தும் சோழன் புகழ் பாடி வாழ்க்கிருந்தார் ; கிற்க.

  • புல்லிதழ் பூவிற்கும் உண்டு ' எனக்கூறுவர் ; குணங் களான் கிறைந்த குன்றென விளங்கும் கோப்பெருஞ் சோழ னுக்குப் பிறந்த மக்கள், தகா வொழுக்கம் மேற்கொண்டு மாண்பிழந்தாராயினர் ; தங்கள் தங்தையார் இருக்கும் போதே, தாம் நாடாள வேண்டும் என்ற பேராசையுடைய ாயினர்; மக்கள் மாண்பிலாாதல் அறிந்த கோப்பெருஞ் சோழன், அவர் விருப்பத்திற்கு இசையானுயின்ை ; அத ல்ை வெகுண்ட அவன் மக்கள், அவனைப் போரிடை வென்று நாடாள முனைந்தனர் ; அவர்கள்பால் ஆட்சியை ஒப்படைப்பின், நாட்டு மக்கள், அல்லல் பல உஅவரே ! என, அந் நாட்டு மக்கள் பால் கொண்ட நல்லெண்ணம், தன் மக்களை வென்று ஒழிக்கத் துணிந்தது; படையோடு வந்து கிற்கும் மக்கள் மீது போர் தொடுக்க எழுந்தான்்.

கோப்பெருஞ் சோழன் கொண்ட முடிவு கன்றேயா யினும், மக்களையே பகைவராக் கொண்டான் என்ற பழிச் சொல் எழுமே என அஞ்சிய அவன் நண்பர்களுள், புல் லாற்றார் எயிற்றியனர், கோப்பெருஞ் சோழனே அணுகி, * வேந்தர் வேந்தே ! நின்னெடு பகைகொண்டு போரிட