உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சோழர்

ஒடோடியும் வந்து, அரசன் செயலறிந்து வருந்தி, அவன் அணித்தே, தமக்கு ஒதுக்கிய இடத்தே இருந்து தாமும் வடக்கிருப்பாராயினர் ; வருவார்,” என்று கூறிய அரச னின் சொல்லாற்றலையும், அரசன் கூறிய சொல் பழுதுரு வண்ணம் ஆண்டு வந்துசேர்ந்த ஆக்கையாரின் செயலையும், ஆண்டிருந்தார் அனைவரும் அறிந்து பெருவியப்புற்றனர்; *வினேக்குங்காலை மருட்கை உடைத்தே,” எனப் பாராட்டி னர் புலவரெல்லாம். வடக்கிருந்த வேந்தனும், புலவர் களும் சின்னுட்களுக் கெல்லாம் பொன்றும் உடல்கள் அழியப் பொன்ருப் புகழ்பெற்றுச் சிறந்தனர்.

மனைவி மகப்பெற்ற பின்னர் வருக எனக் கோப் பெருஞ் சோழனுல் தடைவிதிக்கப்பெற்ற பொத்தியார், மறைந்த மன்னனையும், புலவர்களையும் கினேந்து கினேந்து புலம்பி அவர் புகழ் பாடிக்கொண்டே சின்னுட்கள் வாழ்ந்து, மனைவி மகப்பெற்றவுடனே, ஆற்றிடைக் குறை யடைந்து, அரசன் வடக்கிருந்து உயிர் துறந்த இடத்திற்கு அணித்தே காமும் வடக்கிருந்து உயிர் துறந்தார் ; அரசன் உயிர் துறந்தான்்; அவன் பிரிவினேப் பொருத புலவர் பல்லோர் அவனத் தொடர்ந்து தங்கள் உயிர்களையும் துறந்தனர் என்று உலகோர் போற்றம் உயர் பெரும்புகழ் பெற்று வாழ்ந்த கோப்பெருஞ் சோழன்வழி வாழ்க!

பாவலரும், காவலரும் பாராட்ட வாழ்ந்து, பிறவாப் பெருகிலேயுற்ற கோப்பெருஞ் சோழனின் புலமையும், பண்பாடும் கிறைந்த பேருள்ள்ம் விளங்கும் பாடல்கள் பல உள; அவற்றுள் ஒன்றைக்கண்டு அவனே அறிந்து அக மகிழ்வோமாக பொருள் தேடுங்கால், பொருள்பெறும் வழி அறநெறிப்பட்டதாக இருத்தல் வேண்டும்; பொருள் செய்வார் தம் உள்ளத்தில் நிலவவேண்டிய மக்கட் பண்பு களாகிய அன்பையும், அருளையும் அறவே ஒழித்துவிட்டு, பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளுதல் கூடாது; பொருள் வரும்வழி, அன்புநெறியோடும், அருள்நெறியோடும் மாறுபடுதல் கூடாது : 'அருளொடும்

அன்பொடும் வாாாப் பொருளாக்கம் புல்லார் ; புரள