பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சோழர்

யெடுப்பு, இளஞ்சேட்சென்னிக்கு இரண்டுதலைமுறை கழித்து வாழ்ந்த செங்குட்டுவன் காலத்தை யொட்டி நிகழ்ந்த தொன்ற ஆதலாலும், இளஞ்சேட்சென்னி,கோச ரையோ, மோரியரையே அழித்தான்் எனக் கோடல் சிறிதும் பொருந்தாது. -

இளம்பெருஞ்சென்னி என அகத்திலும், செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி எனப் புறத்திலும் அழைக்கப்பெறுவோரெல்லாம், கரிகாற்பெருவளத்தான்் தந்தையாய உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியேயாகல் கூடும் என்பது, உருவப்பஃ நேர் இளஞ்சேட்சென்னியைப் பற்றிய கட்டுரையில் கூறப்

பட்டுளது; ஊன்றி நோக்கி உண்மையுணர்க.

இளஞ்சேட்சென்னியின் வெற்றி ச் சிறப்புக்களை விளங்கப் பாடிய புலவர், அவன் தன்னைப் பாடிவரும் இர வலர் தமக்கு அணிபல அளிக்கும் அருட்கொடைத் திறத்தை அழகொழுகப் பாடிப் பாராட்டியுள்ளார்; இளஞ் சேட்சென்னி, தன்பால் வந்து இாந்து கின்ற இாவன் மாக்களுக்குத் தான்் போரில் கைப்பற்றிய அணிகள் பலவற். றையும் அளித்தான்் ; அவ்வணிகளின் வகைகளையும், அவற்றை எங்கெங்கே அணிவது என்பதையும் அறிய மாட்டாத அவ்விரவலர்கள், விரலில் அணியத்தக்க அணி களைச் செவியிலும், செவியில் அணியத்தக்க அணிகளே விரலிலும், அரைக்கு உரியனவற்றைக் கழுத்திலும், கழுத் தணிகளே இடையிலும் அணிந்து, காண்பார் கைகொட்டி நகைக்குமாறு விளங்கினர்; அவர் செய்கை, பண்டு இராம லுடன் காடுசென்ற சீதையை இராவணன் தூக்கிச்சென்ற போது, அவள் கழற்றி எறிந்த அவள் அணிகளைக் கண் டெடுத்த குரங்கினம், அவ்வணிகளே அணியும் வகை அறிய மாட்டாது அணிந்து கின்ற காட்சியினை ஒத்திருந்தது; இவ்வாறு, வருவார்க்கு வரையாது வழங்கும் வள்ளன்மை யுடையான் இளஞ்சேட்சென்னி:

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை

தாங்காது பொழிதங் தோனே, அதுகண்டு