உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சோழர்

அறிந்து, அவற்றை அழித்துத் துணே புரிந்தான்் இவன் என்று கூறுகிருர்:

வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில் மூன்றெறிந்த இகல்வேற் கொற்றம்.” ' வீங்குநீர் வேலி உலகாண்டு, விண்ணவர்கோன் ஓங்காணம் காத்த உாவோன் யார் அம்மானை, ஓங்காணம் காத்த உாவோன் உயர் விசும்பில் தாங்கெயில் மூன்றெறிந்த சோழன்.”

(சிலம்பு : உஎ . கசு ச-சுடு; உக : அம்மானை)

சீத்தலைச்சாத்தனர், புகார்நகரத்தே கணிமிகு சிறப் புடன் நிகழும் இந்திரவிழாவினத் தொடங்கிவைத்தோன் இவனே; இவன் வேண்டுகோட்படி விழாநிகழும் இருபத் தெட்டு நாட்களிலும், இந்திரன் தன் பொன்னகர் விடுத்துப் பூம்புகார் புகுந்து வாழ்வன் எனக் கூறுகிருர்.

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த நாளேழ் நாளினும் நன்கினிது உறைகென அமார் தலைவன் ஆங்கது சேர்ந்தது கவராக் கேள்வியோர் கடவார்.” )عاer:# : يق - تو : يلي o(