பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலங்கிள்ளி 101

குயவன் திகிரியின் கீழே, அவன் சிறுவர்கள் பிசைந்து வைத்த மண், அக் குயவன் எண்ணிய வடிவமாகவே மாறிப் பயன் அளித்தலேபோல், இந்நாடு, நலங்கிள்ளியாட்டியபடி யெல்லாம் ஆடும் இயல்புடையது ; கலங்கிள்ளி, கன்பால் வந்து பொருள் வேண்டி கிற்கும் பாணர்க்குப் பொருள் அளித்தற்கு மாருக, அப் பொருட்குரிய விலையாக, சேர்க் குரிய வஞ்சி மாநகரை வென்று கொடுப்பன் ; பாணர்பின் பாடி கிற்கும் விறலியர்க்குத் தரும் பூவிற்கு மாருக, அப் பூவின் விலையாகப், பாண்டியர்க்குரிய மதுரையை வென்று தருகுவன் ; அத்துனே ஆற்றலுடையான் கலங்கிள்ளி :

'கடும்பின் அடுகலம் சிறையாக நெடுங் கொடிப்

பூவா வஞ்சியும் தருகுவன் ; ஒன்ருே ; வண்ணம் விேய வணங்கிறைப் பணைத்தோள் ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென மாட மதுரையும் தருகுவன் ; எல்லாம் பாடுகம் வம்மினே பரிசில் மாக்கள் ! தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி வேட்கோச் சிரு.அர், தேர்க்கால் வைத்த பசுமட் குரூஉத் திரள் போல, அவன் கொண்ட குடுமித்து இத் தண் பணை நாடு.”

(புறம்: க.உ) நலங்கிள்ளியின் காலத்தே, தமிழகத்தில் வேறுபல அரசர்களும் வாழ்ந்திருந்தனர் எனினும், அவர்கள் எல் லாம் அவனுக்கு அடங்கி ஆள்பவரே யன்றித் தனியரசு செலுத்தும் தகுதியுடையவால்லர்; வேந்தர்கள், தம் வெற்றி விளங்க வலம்புரிச் சங்கு முழங்கும் பழந்தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப, அப் பகையரசரிடத்தும் வலம்புரிச் சங்குகள் இருந்தன எனினும், அவற்றை முழக்கினுல், அவ் வொலி கேட்டு நலங்கிள்ளி சினப்பன் என அஞ்சி முழக் காது, அவற்றை அரண்மனேயின் ஒருபால் வறிதே தொங்க விட்டு வைப்பர்:

சேட் சென்னி கலங்கிள்ளி கேட்குவன் கொல் என

இன்னிசைப் பறையொடு வென்றி. வலத்