உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலங்கிள்ளி 103

போர் துணுக்கமாம் என்பதறிந்த நலங்கிள்ளி, நெடுங் கிள்ளி உறையூர்ச் செல்லாவாறு, அவனே அவன் வாழும் ஆவூர்க்கோட்டையிலேயே அழித்துவிட எண்ணினன். உடனே, பெரும்படையோடு சென்று அக் கோட்டையை முற்றுகையிட்டான் ; கலங்கிள்ளியின் பெரும்படையைப் பாழ்செய்யும் வன்மை தன் படைக்கு இன்மையறிந்த நெடுங்கிள்ளி, ஆவூர்க் கோட்டையகத்தே அடைந்திருத்தலே மேற்கொண்டான் ; முற்றுகை பலநாள் நீடிக்கவே, உள் ளிருப் போர்க்கு வேண்டும் உணவு முதலாம் பொருள்கள் கிடைப்பது அரிதாயிற்று ; அந்நிலையை எண்ணியும் நெடுங் கிள்ளி, புறம் போந்து போரிடத் துணிந்தான்ல்லன் ; நலங் கிள்ளியும் முற்றுகையைத் தளர்த்தினைல்லன் உள்ளிருப் போர் உறுதுயர் உறலாயினர்; அகத்தோர் அடையும் ஆற்முெணுத் துயர்நிலை அறிந்து அகம்மிக நொந்த கோவூர் கிழார் எனும் அருத் தமிழ்ப் புலவர், நெடுங்கிள்ளிபால் சென்று, ஆற்றல் உடையையாயின், வாளேந்திப் போரிட்டு வெற்றி பெற வெளியேறு , அறம் கிற்கும் உளம் உடையையாயின், அரணை மாற்ருன்கை ஒப்பித்துப் பணிய வெளியேறு அறமோ, மறமோ இன்றி மறைந்து வாழ்தல் மாண்புடைத்தன்று,” என்று அறிவுரை கூறினர்.

கோவூர்கிழார் கூறிய அறிவுரை கேட்டு ஆவூர்க் கோட்டையை நலங்கிள்ளிபால் ஒப்படைப்பான்போல் ஒப்படைத்த நெடுங்கிள்ளி, உடனே ஒடி உறையூரைக் கைப்பற்றிக் கொண்டான். உறையூர் அரியணையில் அமர விரும்பிய நலங்கிள்ளி, எவ்வாற்ருலும் அதைக் கைப்பற்று தல் வேண்டும் என்ற கன்றிய உள்ளத்தணுயினன். அக்காலை நிகழ்ந்த கிகழ்ச்சி யொன்று, உறையூரை விரைந்து கைப் பற்றவேண்டும் என்ற எண்ணம் நலங்கிள்ளியின் உளத்தே எழச்செய்தது; கலங்கிள்ளியைப் பாடிப் பரிசில் பெற்றதே போல், நெடுங்கிள்ளியையும் பாடிப் பரிசில்பெற விரும்பிய இளந்தத்தன் என்ற புலவன், உறையூர் சென்ருனுக, அவ இனப் பகைவன் ஒற்றன் எனக்கருதிக் கொல்லத் துணிந் தான்் நெடுங்கிள்ளி. இதை யுணர்ந்த நலங்கிள்ளி, நெடுங்