உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. நல்லுருத்திரன் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி,” எனப் போற்றப்படும் கலித்தொகைக்கண், முல்லைத்தினை குறித்துவரும் கலிப் பாக்கள் பதினேழைப் பாடிய புலவன் இச் சோழன் நல்லு ருத்திரன் என்பதல்லால், இவன் வரலாறுபற்றிய செய்தி எதையும் அறிந்து கொள்வதற்கில்லை. நல்லுருத்திரன், இன்றைய இந்து சமயக் கடவுள்கள் பலவற்றையும் அறிந் தவன், பாரதக் கதையினே நன்கு பயின்றவன் என்பது அவன் பாடிய முல்லைக்கலிப் பாக்களால் தெளிவாம். சோழர் குலத்துப் பிறந்த நல்லுருத்திரன், பாண்டியர் பகைவர் குலத்தவராவர் என வெறுத்தொதுக்காது, அவர் பெருமைகளை யெல்லாம் பாராட்டிப் பாவும் பேருள்ளம் வாய்ந்தவனவன். ஏறு தழுவல் விழாக் களத்தே, தன்னேக் கைப்பற்றத் தவறித் தன்முன் வீழ்ந்த ஆயர் இளைஞன் ஒருவனே, முட்டித்தாக்க முனையாது மீளும் காளேக்குப் போர்க்களத்தே வாள் பெற்றிருந்தும் வெற்றி கொள்ளாது, தன்கை யகப்பட்ட வீரனே, அவன்பால் மறமின்மை யுணர்ந்து, அவனேக் கொன் ருெழிக்காது உய்ந்து போக விடும் பெருவீரனே உவமைகறி, அழியுநர் புறக்கொடை அயில்வே லோச்சாக் கழிதறுகண்மை,” யினேக் காதலிக் கும் மறப்பண்பு வாய்ந்த தன் மன நிலையினைப் புலப்படுத்தி யுள்ளான்.

'கோள்வழுக்கித் தன்முன்னர் வீழ்ந்தான்்மேற் செல்லாது

மீளும் புகாேற்றுத் தோற்றங்காண் : மண்டமருள் வாளகப் பட்டானை ஒவ்வா எனப் பெயரும் மீளி மறவனும் போன்ம்..” (முல்லைக்கலி: ச: சஎ-டுo) நல்லுருத்திரன் உள்ளம் உயர்ந்தோர் போற்றும் விழுமிய உள்ள மாம் ; ஊக்கம், உயர்வுள்ளல் ஆய உயர் பெறும் பண்புடைப் பேரரசனவன் என்பது, அவன் பாடிய புறநானூற்றுப் பாட்டொன்றால் நன்கு புலனுகிறது.

உழவர் உழுது பயிர் செய்தாராக, விளைந்து முற்றி வளைந்த கதிர்கள்ை அவ்வுழவர் அறியாவண்ணம் சிறுகச்