பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சோழர்

உரைசால் சிறப்பின் முாைசு ஒழிந்தனவே! பன்னு றடுக்கிய வேறுபடு பைஞ்ஞரிலம் இடங்கெட ஈண்டிய வியன்கட் பாசறைக் களங்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவா உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும், பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்; மார்பகம் பொருந்தி ஆங்கமைக் தனரே; வாடாப் பூவின் இமையா காட்டத்து நாற்ற உணவினேரும் ஆற்ற அரும்பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் பொலிக நும்புகழே' (புறம்: சுஉ)

களம்பாடிப் பரிசில் பெற்றுக் களித்துச் செல்லும்

விருப்புடன் வந்தவன் நான்; களிறு பெற்றுச் செல்ல எண் னின் அவையெல்லாம் பெய்யும் பெருமழையைத் தாங்கி கிற்கும் மலைகளைப்போல், வீமர் ஏவிய அம்புகளைத் தாங்கி அழிந்து வீழ்ந்து விட்டன; கொடிஞ்சியொடு கூடிய நெடிய தேர்களைப் பெறலாம் என எண்ணின், காற்றெனக் கடிது ஒடும் குதிரைகள், களம் முழுதும் வளைத்து வளைத்து இழுத்து ஒடியதால், நிலை தளர்ந்து, வலியிழந்து, முறிந்து சிதறி கிலத்தே வீழ்ந்து அழிந்து விட்டன; கொய்யப் பெற்ற பிடரியினேயுடைய குதிரைகளைக் கொடுக்கக் கொள் ளக் கருதின், வீரர் தம் வாள் தந்த புண்கள், உடலெலாம் விளங்க, காற்றின் இயக்கம் அற்ற கலங்கள் ஆடாது, அசை யாது கடலிடை சிற்பதேபோல், குருதி வெள்ளத்தில் வீழ்ந்து விட்டன; இவ்வாறு, பெறுதற்காம் பொருள் எதை யும் பெறமாட்டாமையால் உள்ளத்தே மகிழ்ச்சி அற்ற புலவர், வாழும் வகையறியாது வாடுவாராயினர்! அந்தோ! அவர் சிலை என்னே!” எனக் களத்தின் கொடுங்காட்சி கண்டு கண்ணிர்விட்டுப் புலம்புவர் கழாத்தலையார்:

'களிறு முகந்து பெயர்குவம் எனினே,

ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போலக்

கைம்மா எல்லாம் கணையிடத் தொ?லந்தன;

கொடிஞ்சி நெடுந்தேர் முகக்குவ மெனினே,