உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒலியமங் கலமும், அதைச் சூழஉள்ள நாடும் பண்டைக் காலத்தில் ஒல்லையூர் எனவும், ஒல்லையூர் நாடு எனவும் முறையே பெயர் பெற்றிருந்தன ; சோழ நாட்டி ற்கும், பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக ஒடும் வெள்ளாற்றின் தென்கரை தென்கோடுை என அழைக்கப்பெறும்; இத் தென் கோளுட்டின் மேலைப் பகுதியே ஒல்லையூர் நாடு ; ஒல்லையூர் நாடு பாண்டிய நாட்டின் வடவெல்லை நாடாகும்; ஒரு கால், அதைச் சோழர்கள் கைப்பற்றிக கொண்டனர் ; இதல்ை, பாண்டியர் குடிக்கு உண்டாய சிறுமையைப் போக்க வேண்டும் என்ற எண்ணம்கொண்ட பூதப்பாண்டியன், அக் காட்டின் மீது படையொடு சென்று அதை வென்று, மீண்டும் பாண்டியர் உடைமை யாக்கினன் ; பூதப்பாண் டியனின் செயற்கரும் இச் செயல் கண்ட பாண்டிநாட்டுப் பெருமக்கள், அவன வெற்றி விளங்குமாறு, ஒல்லையூர் தந்த என்ற சொற்ருெடரை அவன் பெயர்முன் கொடுத்துப் பெருமை செய்தனர்.

பூதப்பாண்டியன், பேராலவாயர் முதலாம் பெரும் புலவர்களும் பாராட்டும் பெருமையுடையாரும், கணவனே இழந்து வாழக் கருதாக் கற்பு நிறைவுற்ருரும், பெரும் புலமை வாய்க்கப் பெற்ருரும் ஆய பெருங்கோப் பெண் டெனும் பெண்ணினல்லாரைப் பெருமனைக் கிழத்தியாகக் சொண்டு பெருவாழ்வு வாழ்ந்திருந்தான்். பாண்டி நாட்டு மையல் எனும் ஊரினயை மாவன், எயில் எனும் ஊரின குய ஆக்கை, அத்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, இயக் கன் ஆய இவ் வைவரும், பூதப்பாண்டியைேடு பெருநட் புடையராவா. -

பூகப்பாண்டியன், தான்் ஒரு பெரு வீாளுதலின், தன் போலும் பெரு வீரரைப் பாராட்டும் பேருள்ளம் பெற் றிருந்தான்் ; பொதியிலிலிருந்து ஆட்சி மேற்கொண்