பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

本4 பாண்டியர்

ஊரில்ல, உயவரிய, நீரில்ல, நீளிடைய, பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கின் செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும் உன்ன மாத்த துன்னருங் கவலை சின்னசை வேட்கையின் இரவலர் வருவர் ; அது முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் இன்மை தீர்த்தல் வன்மை யானே.” (புறம் : க.) கருங்கை யொள்வாட் பெரும் பெயர்வழுதி, வழிவழி உலகாண்ட பெரியோர் வழிவந்தவனுவன் ; கற்பிற் சிறந்த காரிகையா ளொருத்தியை மனைவியாப்பெற்ற மாண்புடைய வைன் என்பனவும் இப் பாட்டால் புலப்படுதல் அறிக.

இவ்வாறு இவன் பெருமையெலாம் தோன்றப் பாராட் டிய புலவர் இரும்பிடர்த் தலையார், கரிகாற் பெருவளத் தான்் பெரு வாழ்விற்குத் தாணே புரிந்த அம்மாளுவர் எனக் கூறுப ஆதலின், இவ் வழுதி, அக் கரிகாலன் காலத்தவ வைன் என்று கொள்க.