பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சேரர்

ஒன்றுமொழிந்து, அடங்கிய கொள்கை, என்றும் பதிபிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி நிாையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின் புேறக் தருதலின் சோயிகக்து ஒரீஇய யாணர் கன்னடு.” (பதிற்து: கங், கடு)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இவ்வாறு எவ்வழி நோக்கிலும், செவ்வியோனதற்கு அவன் பால் காணலாம் ஆற்றற்சிறப்பும், ஆட்சிகலனுமே காரணங்களாகா. அவன் பால் அமைந்து கிடக்கும் அருங்குணங்களும் காரணமாம் ; நெடுஞ்சேரலாதன் நல்ல பல பண்புகளின் கிலேக் களமாய்

விளங்கினுன்

அரசராவார், அறிவும் ஆற்றலும் உடையரேனும், தம் மினும் சிறந்த சான்ருேர் சூழ வாழ்தலைத் தம் தலையாய கடமையாகக் கொள்ளுதல் வேண்டும் , நெடுஞ்சேரலாதன் பால் இப்பண்பு கின்று நிலைபெற்றிருந்தது. அறம் கூறும் ஆன்ருேர்களே, அவன் என்றும் பிரியான். செல்வழிச் செல்வழிச் செல்லும் மெய்ங்கிழல்போல், அவர் தன்னே விட்டுப் பிரியாமையினேப் பெரிதும் விரும்புவன் ,

" அமர்பு மெய்யார்த்த சுற்றமொடு

நுகர்தற் கினிதுசின் பெருங்கலி மகிழ்வே.”

(பதிற்று : க.உ)

பகைவரைப் பாழ்செய்து பணியவைக்கும் பேராற்றல் வாய்ந்தார்க்கு அப்பகைவர், தம் பகைமையொழிந்து பணிக் தக்கால், பாதுகாத்தல் புகழ்தரும் பெருஞ்செயலாம்; பணிந்தார்தம் பிழைபொறுத்தப் பேணுது, மேலும் பழி வாங்க எண்ணுதல் பழியொடு மிடைந்ததாம் ; இதையும் உணர்வான் நெடுஞ்சேரலாதன். அவன் பகைவர் பொறுத் தலாகாப் பெரும்பிழை புரிந்தாரேயாயினும், அன்னர் பணிந்து திறை தந்தக்கால், அவர் பிழையினே மறந்து, அவர் கொடுத்தன கொண்டு அருள்புரியும் அறவுள்ளம்

உடையனவன் :