உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்.நெடுஞ்செழியன் 63

வந்து தங்கியுள பகைவர் படைப் பெருமையினையும் நோக் கிஞர், இடைக்குன்றார் கிழார் எனும் அவன் அவைக்களப் புலவர் ஒருவர். வந்துள்ளவர் மிகப்பலர் எனினும், அவ செல்லாம், இவன் ஆற்றல்முன் என்னுவர்? அவர்கள் அத் தனைபேரும் அழிந்தொழிவது உறுதி , ஆனால், பகற் பொழுது சிறிதே இருப்பதால், அவருள் ஒரு சிலர் உயிர் பிழைத்து உய்தலும் ஒருகால் கூடும் என்ற எண்ணம் எழக் களக்காட்சியைக் கண்டு கின்றார்:

'மூதார் வாயில் பணிக்கயம் மண்ணி,

மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து, தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி வெம்போர்ச் செழியனும் வந்தனன், எதிர்ந்த வம்ப மள்ளரோ பலாே; எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே (புறம்: எக)

இவ்வாறு, இருந்து காண்பார் வியந்து பாராட்டக் களம்புகுந்தான்் நெடுஞ்செழியன்; களத்தே, கடலிடையே செல்லும் கலம் ஒன்று, காற்றுச் சுழன்றடிக்க, செல்லும் இடம் இது; செல்லலாகா இடம் இது எனும் வரையறை யின்றிக், கடல்நீரைக் கிழித்துக்கொண்டு எங்கும் ஒடித்திரி வதேபோல், களிறுகள், பகைவர் படைநடுவே புகுந்து பெரும்பாழ் செய்து களத்தை எளிதாக்க, அவற்றைத் தொடர்ந்து வீரர்கள் வேலேந்திச் சென்று, வேந்தர் படை களைப் பாழ்செய்து வந்தாருள், யானைக்கண்சேய் மாந்தரஞ் சோல் இரும்பொறையைச் சிறை செய்தும், அவ்வரசர்கள் தம் புகழ்கெடுமாறு.அவர் போர்முரசுகள் அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டனர்; செழியன் படைவீரர் செய்யும் போர்ச்சிறப்பறிந்த பகைவர்படை அவரை எதிர்த்து கிற்றலாற்ருத தோற்றுப் புறங்காட்டி ஒடலாயிற்று. புறங் காட்டி ஒடும் பகைவர் படைகண்ட வீரர், தம் வெற்றிச் சிறப்பு விளங்க, வெற்றிமுழக்கம் விண்ணப்பிளக்கப் பேரொலி செய்து மகிழ்ந்தனர் : -

"சளிகடல் இருங்குட்டத்து

வளிபுடைத்த கலம்போலச்