பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடத்திருமாறன் 105

அவருட் கவியரங்கேறினர் மூவர் பாண்டியர் என்ப; அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது உத்தா மதுரை என்ப, ' -களவியல் உரை :

முடத்திருமாறன், சங்கம் அமைத்துத் தமிழ் வளரத் துணை புரிந்ததோடு, தானே ஒரு புலவனாய்ப் பாக்கள் பாடித் தமிழை வளர்த்த பெருமையும் உடையவன்; அவன் பாடிய பாக்களாக, இப்போது நமக்குக் கிடைத் துள்ளன இரண்டே ; அவை இரண்டும், நற்றிணைப் பாக்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளன.

அவற்றுள் ஒன்றில், குட்டுவனுக்குரிய குடமலையினையும், அம் மலையில் மலிந்து கிடக்கும் சுனைகளையும், அச் சுனைகளில் மலர்ந்து கிடக்கும் குவளை மலர்களையும், வண்டுகள் மொய்க்கும் அம் மலர்களின் மணத்தினையும் பாராட்டியுள்ளார் :

'குட்டுவன், குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை

வண்டுபடு வான்போது கமழும்.” (நற் : க.0டு)

மின்னல், இருளே இரண்டாகப் பிளந்துகொண்டு தோன்றிப் பேரொளி செய்ய, இடி, பலகாலும் இடித்துப் பேரொலி செய்ய எழும் கார்மேகம், தன் கடனும் பெரு மழை பெய்யும் மாரிக்காலத்து நல்லிருள், கண்ணுெளியும் மறையுமாறு படர்ந்த பேரிருள் உடைத்து என, மாரிக் காலத்து நள்ளிருள்நிலையினை நன்கெடுத்துக் காட்டும் முடத்திருமாறன் புலமை நலத்தைப் போற்றுவோமாக,

'மின்னு வசிபு

அதிர்குரல் எழிலி முதிர்கடன் கீாக் கண்தார்பு விரிந்த கனையிருள் நடுநாள்.' (நற்: உஉஅ)