உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோக்கோதை மார்பன்

கோக்கோதை மார்பன், தொண்டி எனும் கடற்கரை நகரைத் தலைநகராக்கொண்டு ஆண்ட ஒரு சேர வேந்த னுவன். கோதை மார்பன், பாண்டியரோடு பகைகொண்டு வாழ்ந்தான்் ; கிள்ளிவளவன் எனும் சோழ அரசன் வெள் ளம்போலும் பெரும்படையுடன் பாண்டியர்க்குரிய கூடல் நகரை அடைந்து, ஆங்கு வாழ்ந்திருந்த பாண்டியர் படைத் தலைவனுய பழையனே வென்று, களிறும் புரவியும் கணக்கில கைப்பற்றிக்கொண்டான் எனக்கேட்டு மகிழ்ந்தான்், கோக் கோதை மார்பன்.

நெடுந்தேர்

இழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகிற் கூடல் ஆங்கண் வெள்ளத் தான்ேயொடு வேறு புலத் கிறுத்த கிள்ளி வளவன் நல்லமர் சாஅய்க் கடும்பரிப் புரவியொடு களிறுபல வள்வி எதில் மன்னர் ஊர்கொளக் கோதை மார்பன் உவகையிற் பெரிதே. (அகம் : கூசசு) கோக்கோதை மார்பன் ஆட்சிக்குரிய நாடு, மலேயும் மலேசார்ந்த இடங்களும் பெற்றுக் குறிஞ்சி வளமும், வய அம் வயல் சார்க்க இடங்களும் பெற்று மருத வளமும், கடலும் கடல் சார்ந்த இடங்களும் பெற்று நெய்தல் வளமும் விளங்கும் பெருநாடாம். கோதை மார்பனேட் பாராட்டிய புலவர்களுள் ஒருவராய பொய்கையார், அவன் காடு, பல்வேறு வளமும் பெற்று விளங்கும் பெருநாடாதல் அறிந்து, கோதையைக் குறிஞ்சிகிலத் தலைவனுக்குரிய பெயாகிய நாடன் என்ற பெயரிட்டு அழைப்பனே ? மருதகிலத் தலைவனே அழைக்க ஆளும் ஊரன் என்ற பெய ரிட்டு அழைப்பனே? நெய்தல்கிலத் தலைவனுக்கு உரிய சேர்ப்பன் என்ற பெயரிட்டு அழைப்பனே ?’ என்ற ஐய வாய்பாடு தோன்றப் பாராட்டியதோடு, அவன் நாட்டில்

சே.-5