பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப் பாட்டு 95 வித்தால், நம்மை நம் அன்புடையானுக்கு மணம்செய்து கொடுப்பினும் கொடுப்பர்; அவ்வாறு கொடாது மறுப் பினும் கேடில்லை; இவ்வுலகில் அவர் உறவு அற்றுப் போவதாயினும், வேறுலகில் அவர் உறவு கிடைத்தல் உறுதி என உள்ள அமைதி கொள்ளுதலும் கூடும்,' என் றெல்லாம் கூறிச் செய்வதறியாது செயலற்றுக் கேம்புவா ளாயினள். தம் களவொழுக்கத்தைத் தாய்க்கு அறிவிக்க விரும்பு கிருள் தலைமகள் என்பதறிந்தாள் தோழி; அங்கிலையில் செய்யவேண்டுவதும் அதுவே என்பதறிவாள் அவள்; ஆதலின், உடனே தாயிடம் சென்ருள் ; தனியிடம் அழைத்துச் சென்று, 'அன்ய்ை! மகளின் மனத்தே மறைந்துறை துயர்காண மாட்டாமல், அவள் உடல்நோய் கண்டு உள்ளம் உருகி வாடும் கின்னேயும் காணுகின்றேன் ; உரைப்பின் யாதாமோ என்ற அச்சமே காரணமாக உள் ளத் துயரை உள்ளவாறு உரைக்கும் உரன் அற்றதோடு, தன் தாயின் துயர்நிலை கண்டு தளரும் கின் மகளையும் காணுகின்றேன் ; நோயின் காரணம் அறியாது கலங்கும் கினக்கு இந்நோய். இதல்ை வந்தது என உரைக்கலாம் என எண்ணினல், அது பெண்மையன்று என்று கூறு கிறது என் பெண் உள்ளம்; கூருதுபோனல் கின் துயர் தடுக்கலாற்ருது வளருமே என்பது காண வருத்தமும் மிகுகிறது; இங்கிலேயால் யானும் வருந்துகின்றேன்; இவ்வாறு மூவரும் வருந்துதற்குக் காரணம் ஒருவர் உள் ளத்தை ஒருவர் உணாாமையேயாம் என்பதை உணர்ந் தேன்; ஆதலின், இவள் துயர்க் காரணத்தைக் கூறத் துணிந்தேன்; அன்னய் ! நான் கூறுவனவற்றை வெறுத்து ஒதுக்காமலும், அவற்றைக் கேட்டு எம்மை வெகுண்டு நோக்காமலும், விரும்பிக் கேட்க விரும்புகின்றேன்; மணமக்களின் இருபெரும் குடிகளின் தகுதிகளையும், இருவர் குண நலத்தையும், இருவர் சுற்றத்தார் நலனையும், இருவர் தகுதிப்பாட்டையும் ஒப்பிட்டுக் கண்ட பின்னரே மணவினைக்கு ஒப்பும் உங்கள் செயல்போல் அல்லாமல்,