பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப் பாட்டு 97 எனக் கூறும் அவர்கள் ஒழுக்கச் சிறப்பையும், களிறு கண்டு கடுங்கும் பெண்களுக்கு, 'அஞ்சல் ஒம்பு’ என ஆறு தல் கூறவே அவர்களே அணைந்து, பெண்கள்பால் பெறும் இன்பமே குறிக்கோள் எனக் கொள்ளாது, "விருந்துண் டெஞ்சிய மிச்சில் கின்ளுேடுண்டலும் புாைவது' என அவளோடு இருந்து ஆற்றும் இல்லறமே கல்லறம் எனக் கொள்ளும் இளைஞன் உள்ளத்தின் உயர்வையும், பெண்கள் பால் இன்பம் பெருது, ' பெயரினும் முனியலுரு அன் இளமையின் இகந்தன்று மிலனே வளமையில் தன்னிலை நீர்ந்தன்றும் இலன். என அவன் ஒழுக்கத்தின் சிறப்பையும், * கேளிறை முன்கை பற்றி அமர்தர நாடறி நன்மணம் அயர்கம் சின்னுள் கலங்கல் ஒம்புமின்.” என அவ்வொழுக்கத்தைப் பிறர்க்கு உணர்த்தும் அவன் அறிவுடைமையினையும், கபிலர், குறிஞ்சிப்பாட்டில் வைத் துப் பாராட்டும் பண்பினைப் பாருங்கள்! இவ்வாறே குறிஞ் சிப்பாட்டின் சொல் கயம், பொருட் சிறப்பு, உவமை அழகு என்று கூறிக்கொண்டே போனல் கட்டுரை விரியும்.