பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 க பி லர் உகுப்பானே அவ்வுரையே சிறந்தது எனக்கொள்ளுங்கள்,' என்று கூறி மறைந்தார் ; உடனே புலவர்கள், அவ்வூமை மகனைத் தமிழ்மன்றம் கொணர்ந்து, மண்டபத்தேவைத்து, அவன்முன் தம் உரைகளைப் படித்தனர்; அவ்ஆமை, நக்கீரர், கபிலர், பாணர் இம் மூவர் உரை கேட்டபோதே கண்ணிர் உகுத்தமை கண்டு, அம் மூவர் உரைகளே மிகச் சிறந்தன என அறிந்து, கலந்து வாழ்ந்திருந்தனர். - (2) பாஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத் கில், சங்கப் பலகை தந்த படலம், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் என்ற இரண்டும் கபிலர் கதைகளாகக் கூறுவனவற்றைச் சிறிது காண்போம். காசியில் அசுவமேத யாகம் செய்து முடித்த பிரமன், தம் மனேவியர், சரசுவதி, சாவித்திரி, காயத்திரி முதலியோ ருடன் கங்கை நீராடச் சென்ருன் இடைவழியில், விஞ்சையன் ஒருவன் பாடிய இன்னிசை கேட்டு மயங்கிய சரசுவதி, அங்கேயே கின்றுவிட்டாள். கங்கையடைந்த நான்முகன், நாமகள் இல்லாமை கண்டு, அவளை நீக்கி, அவ் விருவருடன் கங்கை மூழ்கிக் கரை ஏறினன். அங்கிலையில் அங்கு வந்து சேர்ந்த நாமகள், நான் இல்லாதபோது நீ மட்டும் ரோடியது எவ்வாறு?’ என்று வெகுண்டு வின விள்ை ; தான் செய்த குற்றத்தை மறந்து கன்னேப் பழிக் கும் அவளே நோக்கி, இக் குற்றம் நீங்க, நாற்பத்கெட்டுப் பிறவி மக்களாய்ப் பிறப்பாயாக’ என்று சாபம் கொடுத் தான். சாபம் கேட்டு வருந்தும் மனைவியை நோக்கி, ! உன் உடல் உறுப்புக்களென விளங்கும் எழுத்துக்கள் ஐம்பத் தொன்றில் ஆகாரம் முதல் ஹகாரம் ஈருக உள்ள காற்பத் தெட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டுப் புலவர்களாக அகரவடிவினனை இறைவனும் ஒரு புலவனுய்த் தோன்றி, அப் புலவர்களுக்கு அறிவூட்டுவாகை,” என்று கூறிச் சாப விடை தந்தான். - அவ்வாறே நாற்பத்தெட்டு எழுத்துக்களும், நாற்பத் கெட்டு மக்களாய்ப் பிறந்தன ; அவர்கள் அனைவரும் கூடி ஆங்காங்குச்சென்று, தம் அறிவின் திறம் காட்டி வென்று