பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரைப்பற்றிக் கூறும் கதைகள் 107. ஒளவையாகவும் பூமியில் திருவவதாரம் செய்ய அருள் உள்ளம் கொண்டார். - நான்முகன் ஒரு வேள்வி செய்தான்; அதில் குறுமுனி என அழைக்கப்பெறும் அகஸ்தியர் தோன்றினர்; அவர் கடல் கன்னி ஒருத்தியை மணந்து, பெருஞ்சாகான் என்ற மகனேப் பெற்ருர் : அப் பெருஞ்சாகரன், திருவாரூரைச் சேர்ந்த புலைச்சி ஒருத்தியை மணந்து ஒரு மகனைப் பெற்ருர்; அம் மகனுக்குப் பகவன் என்று பெயரிட்டுக் கலே பல கற்பித்து வளர்த்து வந்தார் ; இஃது இவ்வாருக, பிரம்ம வம்சத்தில் வந்த தவமுனி என்பவர் ஒருவர், அருள்மங்கை என்ற அம்மையார் ஒருவரை மணந்து பெண்குழந்தை ஒன்றைப் பெற்ருர்; தவஞானத்தின்மேல் பற்றுக்கொண்ட அவர், அக் குழந்தையைப் பிறந்த இடத்தி லேயே விட்டுவிட்டு விராலிமலே நோக்கிச் சென்று விட்டார். அப் பெண்குழந்தையை உறையூர்ச்சேரிப் பெரும்பறையன் என்பவன் கண்டெடுத்துப் பேணி வளர்த்து வந்தான். அப்போது எதிர்பாராமல் அங்குத் தோன்றிய மண்மாரியால் அச் சேரிமுற்றும் அழிந்து போயிற்று; ஆனால், அப் பெண் மட்டும் எவ்வாருே பிழைத்து விட்டது; பிழைத்த அப் பெண்ணே, அவ்வூரை யடுத்த மேலூர் அகரத்தில் வாழும் நீதியையன் என்பவன் அழைத்துச் சென்று வளர்த்து வந்தான். - ஆண்டுகள் பல கழிந்தன; கலைகள் பல கற்றுத் துறை போய பண்டித மணியாய் விளங்கிய பகவன், காசிகோக்கிச் சென்று கொண்டிருந்தான், இடைவழியில், அம் மேலுார் அகரம் வந்த அவன், அவ்வூர் அறச்சாலை ஒன்றில் தங்கி ஒருநாள் இருந்துபோக எண்ணினன். அங்கே, அவன் நாட்கடன் முடித்து, உணவிற்கு ஆவன ஆக்கிக்கொண்டி ருக்கான். அப்போது, அவ்வறச்சாலையின் காப்பாளரான, அங் திேஐயனின் வளர்ப்புப் பெண்ணுகிய அப் பெண் அங்கே வந்தாள்: பகவன், அவளேக்கண்டு, சினம் கொண்டு. 5. யார் புலச்சியோ ? வலைச்சியோ? இங்கு ஏன் வந்தாய் ' என்று அதட்டித் தன் கையிற் பிடித்திருந்த