பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 17 போய்விட்டார்கள்? மக்களில் ஒருவரும் இலர் என்றே கொண்டாலும், மழையொன்று இருக்கிறதே, அதையுமா அவர்கள் மறந்து போய்விட்டார்க்ள் பெய்யுங் தொழி லால் இந்த உலக உயிர்களேயெல்லாம் புரக்கிறதே அம் மழை அதை அவர்கள் அறியாது போனது ஏனே? இதை உணராக அவர்கள், தங்களையும் புலவர்கள், செங்காப் புலவர்கள் என்று புகழ்ந்து கொள்கிருர்களே! என்ன புலவர்கள் இவர்கள்?’ என்று கூறினர் கபிலர். பாரி பாரி என்றுபல எத்தி ஒருவற் புகழ்வர் செங்காப் புலவர் ; பாரி ஒருவனும் அல்லன் , மாரியும் உண்டு,ஈண்டு உலகுபுரப் பதுவே.’ (புறம்: கஎே) இப் பாட்டைப் பார்ப்போர் எவர்க்கும், மேலே கூறிய பொருளே தோன்ற, இது பாரியைப் புகழ்ந்து கூறியது அன்று; உண்மையில் பழித்துக் கூறியது என்றே எண்ணத் தோன்றும். ஆனல், பாட்டின் பொருளை ஊன்றி நோக்கினல, இது பழித்தல் அன்று; போற்றுதலே என்பது புலப்படும். பாரிக்கு நிகராக மாரியுண்டு என மழையைக் கூறியது, மக்கள் குழுவில் அவனுக்கு நிகரானவர் ஒரு வரும் இலர் என்பத்ளுல் அன்ருே ஆகவே மக்கள் எல்லோரினும் அவனே சிறந்தவன்; கொடைத் தன்மையில் அவனுக்கு ஒப்பானவர் இவ்வுலகில் ஒருவரும் இலர் என்று ஒருவகையில் அவன் புகழ் கூறினாயிற்று. கைம்மாறு வேண்டாமல் உலகைப் புரப்பதில் மாரி, பாரிக்கு நிகரே எனினும், வேண்டுவார்க்கு வேண்டும்போது வேண்டிய அளவு பொருள் அளிக்கும் பாரிபோல், மாரி வேண்டு வார்க்கு, வேண்டும்போது வேண்டிய அளவு அளிப்பதில்லை; வேண்டும்போது பெய்யாது வேண்டாதபோது பெய்யும்; வேண்டும் அளவும் பெய்யாது; தேவைக்கு மேலும் பெய்து கேடு விளைவிப்பது உண்டு; ஆகவேதான் புலவர்கள், உலகைப் புரப்பதில் பாரிக்கும் மாரிக்கும் ஒப்பு இருப் பதைக் கண்டும், மாரியைப் புகழாது, பாரி ஒருவனேயே புகழ்கின்றனர் என்று கூறி மற்ருெரு வகையாலும் அவ க.-2