பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 27 நீ வாழி கன்றை விட்டில் விட்டுக் கவலையின்றிச் சென்று காட்டில் புல்மேய்ந்து பசுக்கள் மனநோக்கி வரும் மாலைக் காட்சிகளால் எங்கள் மனதை மகிழ்வித்த பறம்பே நீ வாழி! பளிங்குர்ேச் சுனைகளையும், பாறைகளிடையே ஒவென ஒலித்துக்கொண்டே உருண்டோடும் அருவிகளே யும் உடைய பறம்பே! நீ வாழி! பாரியின் ஆட்சிச் செம்மையால் சான்ருேர் பலரைப் பெற்றுப் பெருமை கொண்ட பறம்பே. நீ வாழி! பாரி வாழ்ந்த காலத்தில், அவன் புகழால், பிறநாட்டு மக்கள் மனக் கண்ணிற்கு விருந்தளித்து மகிழ்ந்த சிறப்பினை இழந்து, இப்போது ஏனைய மலைகளேபோல் காண்போர் கண்களுக்கு மட்டுமே காட்சியளிக்கும் பறம்பே ! நீ வாழி!” என்று பறம்பின் பல்வேறு சிறப்புக்களையும் எண்ணி எண்ணி வருந்தி அழுது கொண்டே சென்ருர், . முழுநிலா ஒளிவிடும் ஒருநாள், அவர்கள் சிற்றார் ஒன்றில் ஒரு சிறிய குடிசைத் திண்ணையில் இருந்து இளைப் பாறிக்கொண்டிருந்தனர்;அப்போது உப்பு வணிகர், உப்பு மூட்டை ஏற்றிய தங்கள் வண்டிகளை வரிசையாக ஒட்டிக் கொண்டு அவ்வழியாகச் சென்றனர்; வண்டிகள் வரிசை யாகச் செல்லும் ஒழுங்கைக் கண்ட இளமங்கையர் இரு வரும், தம் துயர் மறந்து.எழுந்தோடினர்; அவ்வீட்டிற்கு முன்னே இடப்பட்டிருந்த குப்பைமீது ஏறி கின்று அவ் வண்டிகளே ஒன்று, இரண்டு என வரிசையாக எண்ணி மகிழ்வாராயினர்; அக் காட்சியை வீட்டுத் திண்ணையி லிருந்தவாறே கண்ட கபிலர் கண்கள் நீர்கொண்டன; புறம்பு மலையில் பண்டு தாம் கண்ட காட்சியொன்று அவர் மனக் கண்முன் வந்துகின்று அவர் உள்ளத்தைக் கலக்கிற்று. மூவேந்தர் முற்றுகை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்; பாரியின் மகளிர் இருவரும், பறம்பின் மிக வுயர்ந்த உச்சியொன்றில் ஏறிகின்று, வெளியே பறம் பாணேச் சூழ இருந்த பகைவர் படையினேக் கண்டனர்; பகைவர் படையின் பெருமை கண்டு பயங்கொள்வதற்குப் பதிலாகங்கைகொண்டனர்; நம் தந்தையோ ஒரு குறுகில