பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. கபிலரும் கடுங்கோவாழியாதனும் கபிலர் காலத்தில் சேர நாட்டில் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவன் ஆண்டுவந்தான் ; சேரர் மரபில் இரும்பொறை மரபினர் என்ற பிரிவினர், சேர நாட்டின் ஒரு பகுதியை ஆண்டுவந்தனர். இம் மரபினைத் தோற்று வித்தவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன்; அவன் மகனே செல்வக் கடுங்கோவாழியாதன்; வேளாவிக் கோமான் பதுமன் என்பவன் மகளே மனேவியாகப் பெற் றிருந்தான் ; அவள் பொற்பும் கற்பும் ஒருங்கே பெற்ற வள். இவளோடு உடன்பிறந்தா ளொருத்தி, சேரரின் மற்ருெரு கிளேயினைச் சேர்ந்தோனும், செங்குட்டுவன் தந்தையுமான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இளைய மனைவியாவாள். செல்வக் கடுங்கோவின் தவமகனே, தகடுர் எறிந்த பெருஞ் சோலிரும்பொறை என்ற வீரமகன். கடுங்கோவாழியாதன் ஆட்சிக்குவந்த தொடக்கத் தில், அவன் நாடு. அளவில் சுருங்கியிருந்தது. அவன் இச் சிறிய இடத்தையா ஆள்வது?’ என எண்ணினன். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் ' என்பர் வள்ளுவர். இவன் அதை அறிந்தவன்போல், இந் நாடு அனைவர்க்கும் பொது என்ற சொல் கேட்கவே காணுவான்; உலக அரசர் எல்லாம் தன் ஏவல் வழி கிற்கவேண்டும்; உலகனைத்தும் தன் ஒரு குடைக்கீழ் வரவேண்டும் என விரும்பினுன், 'உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து, வள்ளியம் என்னும் செருக்கு,” என்பவாகலின், தன் ஆசையைக் குறைவறப் பெறும்வரை அவன் ஊக்கம் குறைவானல்லன்; இடம் சிறிது, இடம் சிறிது என்ற எண்ணம் அவனுள்ளிருந்து ஊக்கிக்கொண்டே யிருந்தது : ' வையங்காவலர் வழிமொழிக்கொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொல் பொருஅது இடம் சிறிது என்னும் ஊக்கம் துாப்ப ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகைக் கடந்தடு தானைச் சோலாதன்.? (புறம்: ي(