பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. கபிலர் பாராட்டைப் பெற்றவர்கள் கபிலரால் பாராட்டப்பெற்ற பேராசன், கடுங்கோ வாழியாதன் ஒருவனே கடையெழு வள்ளல்களுள், பாரி, காரி, ஒரி, பேகன், நள்ளி என்ற ஐம்பெரு வள்ளல்களைக் கபிலர் பாராட்டியுள்ளார். இருங்கோவேள், விச்சிக்கோன் என்ற இரு குறுகிலமன்னர்களும் அகுதை என்ற ஆற்றல் மிக்க வள்ளியோன் ஒருவனும் கபிலரால் புகழப்பட் டுள்ளனர்; பிாகத்தன் என்ற ஆரிய அரசன் ஒருவனேயும் அவர் அறிந்துள்ளார்; புலவர்களுள் கழா த்தலையார் கபிலர்! பாராட்டைப் பெற்ற புலவராவர். இவர்களுள், காரி, பேகன், பாரி, விச்சிக்கோன், இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன் முதலி போர்பால் கபிலர் நேரிற் சென்று பாடிப் பழகியுள்ளார். ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவுத்தானம் அளிக் துள்ளார். இவர்களேப்பற்றி முன்னரே விளங்க உரைக்கப் பட்டுள்ளன. மற்றைய மன்னர் மூவரையும், புலவர் கழாத் தலையாரையும், தம் பாட்டில் வைத்துப் பாராட்டியுள்ளார்; ஆனல் பார்த்துப் பழகினர் என்று சொல்வதற்கில்லை. ஒரி:-ஒரி கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; விற் போர் வல்லனுய் வல்வில் ஓரி' எனச் சிறப்பிக்கப் பெறு வோன்; மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த கொல்லி மலை இவனுக்குரியது ; அக் கொல்லிமலையில் அழகே உரு வெனத் திரண்ட பாவை யொன்றுண்டு ; அதனேக் கண் டாரை வருத்தும் தெய்வம் என்பர். கொல்லிமலே காட்டு மக்கள், உழுதொழில் பிழைப்பதால் உணவின்றி வருந்தும் காலத்தில் காட்டுயானைகளைக் கொன்று பெற்ற அவற்றின் கொம்புகளே விலையாகக் கொடுத்து உணவுபெற்று உண்பர். ஒளி, மலையமான் திருமுடிக்காரியொடு போரிட்டு இறக் தான்; அதன்பின் கொல்லிமலையும் சேரவேந்தர்க்கு உரிமை பாகிவிட்டது; ஒரியைக் கொன்ற காரி, அக் கொல்லி நகரில், வெற்றிவிழாக் கொண்டாடி, அந் நகர்த்தெருக்கள் யே ஊர்வலமாகச் சென்ருன் என்ப.