பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் வாழ்க்கைகிலே 47 முடியும் ; ஆல்ை, செல்வத்தின்பால் சிங்தை செல்லாப் பண்பு, அவரை வறுமையிற்கிடந்து வாடவைத்திருந்தது. கபிலர், தம்மையே நம்பி வாழும் பெரிய சுற்றத்தைப் பெற்றிருந்தார்; சுற்றம் என்பது, மனேவியும், மக்களும், பிற உறவினரும் ஆவர்; ஆதலின், கபிலர், இல்லற வாழ் வினே மேற்கொண்ட நல்லவர் என்பது புலம்ை. அவர் செல்லுமிடங்தோறும், அவர் சுற்றமும் உடன் செல்லும்; சுற்றத்தார் பசித்துன்பத்தால் வாடுவது கண்டு மனம் பொறுக்கமாட்டார்; அவர்கள் பசித்துயர் போக்க வேண்டியே, பேகனையும், செல்வக் கடுங்கோவையும் கண்டு பாடினர்; அவர்களைப் பாராட்டிய பாடல்களில், ஒக்கல் பசித்தது, பசியுடை ஒக்கல்” எனத் தன் சுற்றத்தின் பசிக் கொடுமையைக் காட்டிப் பாடியுள்ளமையைக் காண்க. பாரி இறந்த பிறகு உயிர் வாழ விரும்பாதவர் கபிலர்; ஆனால், அவன் மகளிர் மணவினே குறித்துச் சிலநாள் வாழ இசைந்தார்; மகளிர் மணவினே முயற்சிக்கிடையே, சோனடு சென்று செல்வக் கடுங்கோவைக் கண்டுள்ளார் ; இது, பாரி மகளிர் மணவினேக்கு எவ்விதத்திலும் தொடர்புடைய தன்று ; தம் சுற்றத்தாரின் வறுமையினே ஒழிக்கவே ஆண்டுச் சென்ருர் ; இவ்வாறு, தம் வாழ்வின் இறுதிக் குறிக்கோளாகிய பாரிமகளிரின் மணவினைக் கிடையேயும், தம் சுற்றத்தார் நலனைக் கபிலர் எண்ணினர் எனின், அது அவர் சுற்றத்தின் வறுமைக் கொடுமையினையும், அவர் துயர் காணமாட்டாக் கபிலர் கருணையுள்ளத்தையும் அன்ருே காட்டுகிறது? -