பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 க பி ல ர் வருந்தி வாழ்வதினும் இறந்து விடுதல் இன்பம் தரும்; "சாதலின் இன்னதது இல்லை; இனிது அது.ாஉம், ஈதல் இயையாக் கடை. இவ்வுண்மையை உணர்ந்தவர் கபிலர்; ஆதலின், ஈதல் இரத்தார்க்கு ஒன்று ஆற்ருத வாழ்தலிற் சாதலும் கூடும்” எனவும், 'இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்க லாற்ருக்கால் தன் மெய் துறப்பான்’ எனவும் இரு இடங்களில் கூறி, இாந்தோர்க்கு ஈதல் இயலா இழி வாழ்வை விரும்பாத தம் உள்ள வளத்தைக் கபிலர் உணர்த்துகிரு.ர். பொருட் பயனையும் அதன் அருமையினேயும் உணர்ந்த கபிலர், அப் பொருளை எப்படியாயினும் பெற்றுவிடல் வேண்டும் என்று விரும்புவால்லர்; 'தெண்ணிர் அடு புற்கையாயினும் தாள் தந்தது உண்ணலின் ஊங்கினியது இல்” என்ற உயர்வுள்ளம் உடையவர் கபிலர் ; பிறர்பால் சென்று, பின்னின்று இரந்து பொருள் பெறுவதை இழி வெனக் கருதும் அவர் உள்ளம்; பெண் ஒருத்திபால் உள் ளத்தைப் பறிகொடுத்த இளேஞன் ஒருவன், அவளும் அவள் தோழியும் ஒருங்கிருக்கும் காலம் பார்த்து அவர் முன் சென்று கின் முன் ; வந்து வாய்திறவாது கிற்கும் அவனேக்கண்டதோழி, நீ வேண்டுவது யாது?’ என்று கேட்டாள்; அதற்கு அவன், வேண்டியதைக் கூறினல் மறுக்காமல் தருவீர்களோ' என்ருன்; அதற்குத் தோழி, 'தன்பால் வந்து கிற்போர்க்குப் பெரும்பொருள் அளிக் கும் உள்ளமும் பொருளும் ஒருங்கே உடையான் மகள் இவள்; ஆகவே, விரும்புவதைக் கூறின் மருது அளிப்பாள் இவளும்,” என்ருள். அதற்கு அவ்விளேஞன், “ஏ பேதாய்! பிறர்பால் சென்று இரந்து பொருள் பெறுபவன் என்ரு என்னேயும் எண்ணிக்கொண்டீர்கள் அத்தகைய புல்லறி வுடையேனல்லன் நான்-பொருள் வேண்டும் புன்கண்மை சண்டில்லை-அவ் விழிதன்மையினே என்பால் காணல் இய லாது,’ என்று கூறினன் என்று பாடி, இாந்து பெறும் பொருள் இழிவுடைத்து என்று கபிலர் எடுத்துக் காட்டுவார். -