பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. குறிஞ்சிப் பாட்டு மலேயும் மலேசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும் ; கல் நிறைந்த மலைகிலமே முதற்கண் தோன்றிய கிலம் என்பார் சில நூல் வல்லார் ; மிகப் பழமையான காலம் என்று கூறுவதற்குக் 'கல் தோன்றி மண் தோன்முக் காலம் ” என்று அறிஞர் கூறும் கூற்று, கில நூல் வல்லார் முடிவிற்கு அரண் செய்தல் காண்க. கிலங்களுள் முதற்கண். தோன்றியது குறிஞ்சி கிலமாவதைப் போன்றே, மக்கள் முதற்கண் வாழத் தொடங்கிய இடமும் அக் குறிஞ்சி கிலமே. தொடக்கத்தில் விலங்குகளேப்போன்றே, மக்களும், உழைத்து உண்ண அறியாது, கிடைத்ததை உண்டே வாழ்ந்தனர்; அத்தகைய வாழ்விற்கு ஏற்றவாறு, பிறர் உழைப்பின்றித் தாமாகவே விளைந்து கிடக்கும் காய், கனி, கிழங்கு வகைகளைக் குறிஞ்சி கிலம் பெற்றிருந்தது ; உலோகம் எதையும் கண்டறியாக் காலத்தில், மக்கள் கையாண்ட கற்கருவிகளும் அக் குறிஞ்சியிலேயே கிடைத் தன ; கல்லாயுதங்களையெடுத்து, மக்கள் கையாண்ட முதல் ஆயுதம் வில் வளைத்து விடப்பட்ட மூங்கில் விரைந்து கிமிர்ந்து பிறபொருள்மீதுபட்டு அழிப்பதைக் கண்டே வில்லைத் தோற்றுவித்தனர் மக்கள் ; மக்கள் கையாண்ட வில் தோன்றத் துணைபுரியும் மூங்கிலும் அக் குறிஞ்சியி லேயே உண்டு. இவ்வாறு எவ்வகையாலும் முதலிடம் பெறும் குறிஞ்சி, மக்கள் ஒழுக்க நெறியிலும் முதலிடம் பெற்றுளது. . . ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழ்வதே மக்கள் வாழ்க்கை அம் மக்கள் வாழ்க்கை, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்ற ஐந்து ஒழுக்கத்துள் அடங்கும். அவ் வொழுக்கங்களுள் முதற்கண் கிகழ வேண்டிய ஒழுக்கம் புணர்தல், புணர்தல் ஒழுக்கமாவது, ஒருவனும் ஒருத்தியும் முதன் முதலில் ஒருவரை ஒருவர் காண்பது முதல், அவர் கூடி மணம் புரிந்து கொள்ளும் வரையுள்ள நிகழ்ச்சிகளைக் கொண்டதாம். களவொழுக்கம்