பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

૪8 க பி லர் வாறு அவர்கள் பாடியன கோவை என்றழைக்கப் படலா யின. பிற்காலப் புலவர்கள் பாடி மகிழ்ந்த இக் கோவை முறைக்கு வழிகாட்டியவர் கபிலர். கபிலர் பாடிய அகத்துறை தழுவிய பாடல்கள் 197-ல், 191 பாடல்கள் குறிஞ்சித்தினை பற்றியன எனினும், அவை, அக் ಸ್ಥಳೀಸ್ಗಿಸಿ வரிசையாகப் பாடிக் காட்டுவன அல்ல; ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிலேயை விளக்கு வனவே என்பது உண்மை; எனினும் அவர் இயற்றிய இக் குறிஞ்சிப்பாட்டு, தோழி தலைமகள் ஒழுக்கத்தைத் தாய்க்கு அறிவிக்கும் அறத் தொடுநிற்றல்' என்ற நிலையை விளக்குவதாகக் கொண்டு அத் தலைமகளும் தலைமகனும் கண்டதுமுதல், அக் களவொழுக்க்த்தைத் கோழி செவி லிக்கு உணர்த்தும் அறத்தொடு கிலைவரை உள்ள நிகழ்ச்சி களே எல்லாம் தொடர்பாகக் கூறுகிறது. இவ்வாறு, அகத்திணைத் துறைகளே வரிசையாகப் பாடிப் புதுமுறை கண்டவர், சங்ககாலப் புலவர்களுள் கபிலர் ஒருவரே. W - W. கொல்லையில் செழித்து வளர்ந்துள்ள தினை, கதிர் விட்டு முற்றத் தொடங்கிவிட்டது; முற்றும் அக் கதிர்களைக் கிளிகள் கவர்ந்து செல்வதைத் தாய் கண்டாள்; தன் மகளே யும், அவள் உடனடும் தோழியர்களேயும் அழைத்தாள்; தழல், தட்டை, குளிர் போன்ற கிளியோட்டும் கருவிகளைக் கையில் தந்தாள் ; கொல்லைக்குச் சென்று மாலைவரை யிருந்து கிளிகளே ஒட்டிக் காவல் புரிந்து வாருங்கள், என்று கூறி வழி அனுப்பினள். புனத்தில் வானுற வளர்த்த ஒரு மரத்தின் உச்சியில் பாண் அமைத்திருங் தனா அவா. அண்ணன்மார். புனத்ை தயடைந்த மகளிர் அதன் மீது ஏறியிருந்து, காயும் வெயிலையும் கருதாது, கதிர்களைக் கவர்ந்து செல்லும் கிளிகளைக் கடிந்துகாப் பாராயினர்.

இவ்வாறு e காவல்ெதாழிலில் கருத்துடையாாய்ப் பலநாள் வாழ்ந்து வந்தனர்; ஒருநாள், எங்கிருந்தோ பெருமழை வந்தது; பெருங்காற்றும், மின்னலும், இடியும் கொண்டு பெய்தது; கடலும் வற்றிற்ருே எனக் கருதும்