பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - க பி ல ள் இங்கிலையில், உயிரைப் பற்றிய அச்சம் ஒழிக்க தாகவே, தலைமகள் தன்னுணர்ச்சி பெற்றவளாயினுள்; உணர்ச்சிபெற்ற அப்பொழுதே, அவள் உயிரோடு உடன் பிறந்த காணமும், அந் நாண் வழியே, இங்கிலேயில் தன்னைப் பிறர் கண்டால் யாது எண்ணுவரோ ? எனப் பழிகண்டு கலங்கும் அச்சமும் அவளேப் பற்றின. அச்ச மும் நாணமும் அடையவே, அயலான் ஒருவனேச் சார்ந்து கிற்கும் கிலேகண்டு கலங்கினுள்; கலங்கி, கின்ற இடத்தின் நீங்கி வெளியேற முயன்ருள். ஆனல், அவ்விளைஞன் அவளேவிடாது இருகையாலும் இறுகப் பிணித்துக் கொள் வானுயின்ை. - அவர்கள் இருக்க இடத்திற்கு நேரே ஒரு பாறை , பாறை முழுதும் பழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்றன; அக் கற்பாறைக்கிடையே ஒரு பெரும் சுனை ; அச் சுனே யைச் சூழப் பலாவும் மாவும் பழுத்து கிற்கின்றன ; அவற் றின் பழங்களினின்றும் ஒழுகிய சாறெல்லாம் ஒடி அச் சுனையில் தேங்கித் தேறலாய் மாறி மணக்கிறது; அத் தேறலோடு வந்து கலக்கிறது மலைத்தேன்; இந்தச் சுனே நாடி வந்தது ஒர் அழகிய மயில்; சுனேயில் கிறைந்து கிடக் கும் தேறல் தெளிவைக் கண்டது; அதை நீர் என்று கொண்டு உள்ளமா உண்டது; உடனே மயக்கமுற்றது; நடையும் தளர்ந்தது. விண்ணே முட்டும் முடிகளேயுடைய ஒரு பெரிய மலை அப் பாறையை அடுத்துளது; அம் மலைமீது மலர்ந்து மணக்கும் காந்தள் மலர்கள், அம் மலை யடிவாரத்தே சிதறி வீழ்ந்து பாவி, அவ்விடத்தைக் கம்பளம் விரித்த களம்போல் கவினுறச் செய்கின்றன. இவ்விருபெரும் காட்சிகளையும் கண்டு கின்ருள் தலைவி. அக் காட்சிகளுக்கும், அக்காளே கிகழ்ச்சிக்கும் அவள் உள்ளம் தொடர்பு காணத் தொடங்கிற்று. பாறையை அக்காடகவும், பாறையில் சிதறிக்கிடக்கும் மிளகினே அங்காட்டில் வாழும் மக்களாகவும், சுனையைத் தலைவன் பிறந்த குடியாகவும், மா பலா இரண்டின் சாறும்