பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுநல்வாடை 97

அம்மியிலிட்டு அரைக்கலாயினர். குளிர்காலமாதலின், சந்தனம் பூசுவாரின்மையால், சந்தனக்கல்லும் கட்டையும் பயனுறுதல் இன்றி, ஒருபால் போடப்பட்டுள்ளன. மகளிர் தம் கூந்தல் உலர அகிற்புகை ஊட்டுவாராயினர் ; கோடையின் வெம்மை போக்கப் பயனுற்ற விசிறிகள், குளிர்காலத்தே பயனுறுதல் இல்லாமையால், நன்கு உறையிடப் பெற்றுச் சிலந்தி நூல்களால் சூழப்பெற்றுக் கைப்படாக் கோல்களில் தொங்கலாயின; மாடங்களில் வேனிற்காலத்தே தென்றல் உலாவுமாறு அமைத்த சாலேகங்களில் கதவுகள் எல்லாம் நன்கு மூடப்பெற்று விட்டன : வாடை, சிறுசிறு மழைத்துளிகளே வாரிவாரி இறைத்துக்கொண்டே வீசுவதால், வாய் குவிந்த கலத்து நீர் குடித்தால் குளிர் மிகும் என அஞ்சி அதை எவரும் உண்ணுது, வாயகன்ற சட்டிகளில் நெருப்பிட்டு அதன் அருகே அமர்ந்து குளிர் போக்கி வெப்பம் பெற்று வாழ லாயினர்; இவ்வரும் பெரும் காட்சிகளையும் கிகழ்ச்சிகளே

யும் உடையதாய்க் கூதிர்க்காலம் பிறந்துவிட்டது.

சிற்ப நூல் வல்லார், சித்திரைத் திங்களின் இடைப் பட்ட பத்தநாட்களில் யாதேனும் ஒருநாளில் பதினைந்தாம் நாழிகையில் நாற்றிசைக் கடவுளரையும் கைதொழுது தொழில் தொடங்கி, பேரரசர் வாழ்தற்கேற்ற பெருமை உடையவாய்ச் செய்து முடித்த மனேகளையும் வாயில் களையும் மண்டபங்களையும் சேர வளைத்துக்கொண்டு உயர்ந்த மதிலின்கண் உள்ள, இரும்பால் இயன்ற ஆணி களும் பட்டங்களும் பொருத்தப்பெற்று, சாகிலிங்கம் வழிக்கப்பெற்றுத் தாழோடும் கூடிச் செய்யப்பெற்ற இரு கதவுகளையும், இடையே கிருமகளையும், இருபாலும் குவளை மலர்களோடு யானைகளையும் உடைய சித்திரம் அமையப் பெற்ற உத்தரத்தில் செருகப்பெற்ற தொழில்வல்ல தச்சன் இடைவெளி சிறிதும் இன்றிக் கடாவிய பல மரங்களால் ஆகிய நெடுநிலையினையும், வெற்றிக்கொடி யேந்திய வீரர்களே மேலேற்றிக்கொண்ட யானைகளும் செல்லுமாறு, உயர்ந்த உயர்ச்சியினையும் உடைய மலையை, இடையே குடைந்தாற்:

க.-7 - . . . . . . .”