பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*. வாழ்க்கைநிலை

புலவர்கள் வரலாற்றினை அறிவதற்கு வழித்துணையாய் விளங்குவன அவர் இயற்றிய பாடல்களே; அவர் பாடல்கள் எல்லாம் அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என இருவகைப் படும்; அகப்பாடல்கள், அன்பின் ஐக்திணை தழுவி, சுட்டி ஒருவர் பெயர் குறியாது வருவன ஆதலின், அவை வரலாறு அறியத் துணைபுரிவன அல்ல; தங்கள் அன்பிற்குரிய அரசர்களே, தங்கள் வறுமைபோக வழங்கிய வள்ளல்களைப் பாடிய பாக்கள் புறப்பாக்களே ஆதலின், அப் புறப்பாக்களே வரலாறு உணர்த்துவதில் பெருங் துணைபுரியும். -

நக்கீசர் பாடிய பாக்களுள் புறத்துறை கழுவிய பாடல்கள் ஐந்தே ; அவற்றுள்ளும், இாண்டு பாடல்கள் வரலாற்றுச் சிறப்பில்லாதன ஒன்று பொருண்மொழிக் காஞ்சியாம் பொருளுரை கொண்டது; மற்றென்று முருகனைப் பாராட்டிய திருமுருகாற்றுப்படை ஆக இவ்வாறு, அவர் பாடிய பாக்கள் எல்லாம் புறப்பொரு ளுாைக்கும் பெருமை இலவாய்க் காணப்படுதலால், அவர் வரலாற்றினே நம்மால் நன்கு அறிந்துகொள்ள முடிய வில்லை. நக்கீரர், எந்த அரசன் அவையிலும் இருந்து பாடியவர் அல்லர்; இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய கன் மாறனுக்கும், நக்கீானுர்க்கும் உள்ள தொடர்புயாது என்பதை, அவனே அவர் பாடிய பாட்டு புலப்படுத்தவில்லை; தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாராட்டிய நெடுநல்வாடையும் அவர் வரலாறுபற்றி ஏதும் குறிப்பிடவில்லை; பிடஆர்கிழான் பெருஞ்சாத்தனைப்பாடிய புறநானூற்றுப் பாட்டில், அவனேக் காண்பதற்கு முன்னுள் நண்பகலில் சுரனுழந்து வருந்தியதாகவும், மாலையில் அவன் வாயில் முன் நின்று வாழ்த்தியதாகவும், அவன் இவரை அன்புடன் ஏற்றுத் தன் மனேவியை அழைத்து, என்னைப் போற்றுவதுபோல் இவனேயும் போற்றுக, என்ருன் எனவும், அன்று முதல் அவனே மறந்ததும்